தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு தீபா­வளி முற்­ப­ண­மாக 6,500 ரூபாவை வழங்­கு­வ­தற்கு தோட்டக் கம்­ப­னிகள் இணக்கம் தெரி­வித்­துள்­ள­தாக இலங்கைத் தேசியத் தோட்டத் தொழி­லாளர் சங்கப் பொதுச் செய­லாளர் வடிவேல் சுரேஷ் எம்.பி.  நேற்று தெரி­வித்தார். 

இது­கு­றித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், 

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு கடந்த தீபா­வளிப் பண்­டிகை முற்­ப­ண­மாக 10, 000 ரூபா வழங்­கப்­பட்­டது. ஆனால், தற்­போது சம்­பள உயர்வுப் பிரச்­சி­னையில் இழு­பறி நிலை காணப்­பட்­டதால்,  6, 500 ரூபாவை முற்­ப­ண­மாக  வழங்க தோட்டக் கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளன என்று தெரிவித்தார்.