மாத்தறை - மகலுவலஹேன பிரதேசத்தில் வல்லப்பட்டைகளுடன் பயணித்துக் கொண்டிருந்த இரு சீனா பிரஜைகள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதாகியுள்ளனர். 

இதன்போது சந்தேகநபர்கள் வசமிருந்து 4 கிலோ 340 கிராம் வல்லப்பட்டைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் கைதானவர்களை இன்று மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.