தமிழர் மரபுரிமை பேணும் தமிழ் ஆஸ்திரேலியர்களின்தனித்துவமான முயற்சியாக அமைகின்ற 'தமிழர் திருநாள்ஆஸ்திரேலியா’ இவ்வாண்டும் சிறப்பாக மெல்பேர்னில் ஜனவரி மாதம் 16ம் திகதி நடைபெற்றது.
சமகால கோவிட்தொற்றுநோய் பரவல் காரணமாக, கேசி தமிழ் மன்றம் உட்பட்ட பல விக்டோரியத் தமிழ் அமைப்புக்கள்இணைந்து வழங்கும் இந்த நிகழ்வு, மட்டுப்படுத்தப்படவகையில் நடைபெற்றது. இந்நிகழ்வை மெய்நிகர் நிகழ்வுத்தளமான http://www.virtualevents.org.au இல் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தார்கள்.
கேசி தமிழ் மன்றத்தினர் 2011 ஆம் ஆண்டு, விக்டோரியாவின் தென்கிழக்கு பகுதியில், தை பொங்கல்பண்டிகையை உள்ளூர் தமிழ் சமூகத்தை ஒன்றிணைத்துசிறிய விழாவாகக் கொண்டாடத் தொடங்கினார்கள்.
நாளடைவில் அங்கிருந்தவருக்கு இந்த விழாவை மிகப்பெரிய நிகழ்வாக நடாத்த வேண்டுமெனும் பரவலானஆர்வம் ஏற்பட்டபோது, விக்டோரியாவில் உள்ள மற்றையதமிழ் அமைப்புகளையும் உள்வாங்கி இவ்விழா விரிவாக்கம் அடையத் தொடங்கியது.
முழு நாள் நிகழ்வாக உள்ளகமற்றும் வெளியக நிகழ்ச்சிகளை உள்ளடக்கி முழுக்குடும்பத்துக்கும் களிப்புத் தரும் நிகழ்வாக மாறியது.
இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்கள் யாதெனில், தமிழர்வாழ்வியல் குறித்த விழிப்புணர்வை அவுஸ்திரேலியா கண்டத்தில் பரந்து வாழும் மக்களுக்கு ஏற்படுத்துதல், நமது பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல ஒரு தளத்தை உருவாக்குதல் மற்றும் 'தமிழ் ஆஸ்திரேலியர் ' எனும் அடையாளத்தை வலுப்படுத்துதல் என்பனவாகும்.
ஆஸ்திரேலியாவில் வாழும் பல்லின கலாச்சார மக்களுக்கு, எம் பாரம்பரியத்தின் தனிச் சிறப்பை எடுத்துரைக்கும் தளமாக அமையும் இவ்விழா, விக்டோரியத் தமிழ் கலாசாரநிலையத்தில் அதிகாலையில் தமிழ் தாய் வாழ்த்து, அவுஸ்திரேலியா பூர்வகுடியினரை நினைவு கூரல் மற்றும் அவுஸ்திரேலியா தேசிய கீதம் என்பவற்றுடன் ஆரம்பித்தது.
அங்கு கூடியிருந்தோர் சமூக இடைவெளி பேணி, பல வீட்டுப் பானைகள் இணையும் சமூகப் பொங்கல் பானைகளைத் தயாராக்கினார்கள்.
சற்று நேரத்தில் அங்குகூடியிருந்தோர் இயற்கைக்கு பொங்கலை படைத்தகையோடு, அங்கு வருகை தந்திருந்த அனைவரையும் திரு குலேந்திர சிங்கம் சிவ சுதன் அவர்கள் வரவேற்று, தமிழர்வாழ்வியலின் சிறப்புகளையும் தமிழ் ஆஸ்திரேலியர்களின் தேசத்துக்கான பங்களிப்பையும் பகிர்ந்து, ஜனவரி மாதத்தை'தமிழ் மரபுத் திங்கள்' என அரசாங்கம் பிரகடனப்படுத்த வேண்டும் என வேண்டினார்.
அடுத்து விழாவின் சிறப்பு விருந்தினர்கள் மத்திய பல் கலாசார உதவி அமைச்சர் திரு. ஜேசன் வுட், விக்டோரியா பாராளுமன்ற உறுப்பினர் திரு. மெங் ஹியாங்டாக், விக்டோரியா பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி. ரியன் கியூ, மற்றும் விக்டோரியா பசுமைக் கட்சித் தலைவி, கலாநிதி சமந்தா ரத்னம் ஆகியோர் உரையாற்றினார்கள்.
அடிலெய்ட் தமிழ் அமைப்புகளினால் வடிவமைக்கப்பட்ட'தமிழ் மரபுத் திங்கள்' குறித்த தபால் தலையை திரு.சிவசுதன் அறிமுகப்படுத்த, டாக்டர் சமந்தா ரத்னம் அதனைவெளியிட்டார்.
சிறப்பு விருந்தினர்கள், மற்றும் தமிழ் சமூகதலைவர்கள், டாக்டர் சமந்தா ரத்னமிடமிருந்து தபால் முத்திரைகளை பெற்றுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, கலை நிகழ்வுகள், கண்காட்சிகள்( புகைப்படம், கைவினைப் பொருட்கள், ஓவியங்கள், புத்தகங்கள்) போன்ற பலவற்றை கண்டு களிக்க வாய்ப்பு கிட்டியது.
நிகழ்ச்சி முடிவில் திரு குலராசன் செந்தூரன் நிகழ்வைசிறப்பாக ஒருங்கிணைக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து நிகழ்வை நிறைவு செய்து வைத்தார்.
(மெல்பேர்ன் , ஆஸ்திரேலியா)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM