வாழைச்சேனைப் பகுதியில், விபத்துக்குள்ளான நிலையில் இயந்திரப் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காயங்கேணி மீனவர்கள் தெரிவித்தனர். 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி - புல்லாயுமுனை கடற்பரப்பில் வைத்து இன்று புதன்கிழமை (9) குறித்த இயந்திரப்படகு தலைகீழாக மிதந்த நிலையில் மீட்காப்பட்டுள்ளது. 

இந்த இயந்திரப்படகு அப்பகுதியிலுள்ள கற்பாறை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக மீனவர்கள் மேலும் தெரிவித்தனர். 

சுமார் 35 அடி நீளம் கொண்ட குறித்த இயந்திரப் படகு யாருடையது என்பது பற்றியும், அதில் பயணித்த மீனவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று மீனவர்கள் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக கடற்படையினர் மற்றும் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் மீனர்கள் மேலும் தெரிவித்தனர்.