இலங்கை வருகிறார் நரேந்திர மோடி !

09 Feb, 2022 | 02:47 PM
image

(இராஜதுரை ஹஷான்) 

இலங்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள 5 ஆவது பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முயற்சி (பிம்ஸ்டெக்) மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பிம்ஸ்டெக் அமைப்பின் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் அரச தலைவர்களும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அறிய முடிகிறது.

4 ஆவது பிம்ஸ்டெக் உச்சிமாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கையில் நடைப்பெறவுள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் பிம்ஸ்டெக் குழுவினர்களிடம் அறிவித்துள்ளார். 

கடந்த 6ஆம் திகதி இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜயசங்கருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பிம்ஸ்டெக் மாநாடு குறித்தும்,மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பங்குப்பற்றல் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

பல்துறை தொழிநுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாடு இம்முறை இலங்கையில் நடைப்பெறவுள்ளதை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் டென்சின் லெக்ப்ஹெலிடம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்..

2018ஆம் ஆண்டு தொடக்கம் 2020ஆம் ஆண்டு வரை பிம்ஸ்டெக் மாநாட்டின் தலைமை பொறுப்பினை இலங்கை வகித்துள்ளது.

பிம்ஸ்டெக் பங்களாதேஷ்,பூட்டான்,இந்தியா,மியன்மார்,நேபாளம்,இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் ஏழினை கொண்ட பன்னாட்டு அமைப்பாகும்.வங்காள விரிகுடாவை அண்மித்த தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிடையில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவது இவ்வமைப்பின் நோக்கமாகும்.

பிம்ஸ்டெக் முக்கிய 14 துறைகளை உட்படுத்திய வகையில் நடைபெற்றதோடு தற்போது அது ஏழு துறைகளாக குறைக்கப்பட்டுள்ளது. 

விஞ்ஞான தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கத்துறைக்கு இலங்கை தலைமை வகிக்கிறது.

பங்களாதேஷ் வியபாரம் மற்றும் முதலீட்டு துறைக்கும், பூட்டான் சுற்றாடல் மற்றும் காலநிலை சீர்கேடுட்டு துறைக்கும்,மியன்மார் விவசாயம் மற்றும் உணவுப்பாதுகாப்பு துறைக்கும்,இந்தியா பாதுகாப்பு துறைக்கும்,நேபாளம் தனிநபர் தொடர்பு மற்றும் தாய்லாந்து தொடர்பாடல் துறைக்கும் தலைமை வகிக்கிறது.

4ஆவது வங்காள விரிகுடாவின் பல்துறை தொழிநுட்பம் மற்றும் பொருளாதார உச்சி மாநாடு கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேபாளம் காத்மண்டு நகரில் இடம்பெற்றது.3ஆவது பிம்ஸ்டெக் உச்சிமாநாடு 2014ஆம் ஆண்டு மியன்மாரில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு...

2025-03-21 21:19:44
news-image

ச.தொ.ச. நிவாரண பொதியில் ஏன் தனியார்...

2025-03-21 21:20:24
news-image

வேட்புமனு நிராகரிப்பு எதிராக சட்டநடவடிக்கை

2025-03-21 22:55:26
news-image

இலஞ்சம் பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை சத்தியக்கடதாசி...

2025-03-21 21:26:25
news-image

நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண்...

2025-03-21 22:20:56
news-image

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால்...

2025-03-21 22:12:31
news-image

உரமோசடியுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர் குறித்து...

2025-03-21 22:07:45
news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59
news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10