'மகான்' படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகும் துருவ் விக்ரம்

09 Feb, 2022 | 12:34 PM
image

'சீயான்' விக்ரம் நடிப்பில் உருவான 'மகான்' படத்தில் இடம்பெற்ற 'மிஸ்ஸிங் மீ ..' எனத் தொடங்கும் றாப் பாடலை பாடி, நடிகர் துருவ் விக்ரம் பாடகராக அறிமுகமாகிறார்.

'சீயான்' விக்ரமின் 60 ஆவது படமாக தயாராகியிருக்கும் மகான் படத்தில், அவருடைய மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் நடித்திருக்கிறார். 

எக்ஷன் திரில்லர் ஜேனரில் உருவாகியிருக்கும் இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். 

இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார். 

இந்தப்படத்தில் 'சீயான்' விக்ரமுடன் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

'மகான்' திரைப்படம் பெப்ரவரி 10ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது. 

தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகிறது. 

துள்ளலான நடனத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி இருக்கும் இந்த ' மிஸ்ஸிங் மீ...' என்ற பாடலை பாடலாசிரியர் விவேக்குடன் இணைந்து நடிகர் துருவ் விக்ரமும் எழுதியிருக்கிறார். 

இந்தப் பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். 

தந்தையுடன் முதன்முதலாக நடிக்கும் ‘மகான்’ படத்திலேயே, நடிகர் துருவ் விக்ரம் பாடலாசிரியாகவும்,, பின்னணி பாடகராகவும் அறிமுகமாவதால், அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமின்றி,  தமிழ் திரையுலகிற்கு பன்முக கலைஞர் ஒருவர் கிடைத்திருக்கிறார் என திரையுலகினர் மகிழ்ச்சியடைந்து பாராட்டுகிறார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால்...

2025-03-25 20:42:47
news-image

'எம்புரான்' திரைப்படத்தின் முதல் பாடலின் லிரிக்கல்...

2025-03-25 19:03:07
news-image

பொங்கலுக்கு மோதிக்கொள்ளும் ஜனநாயகன் - பராசக்தி

2025-03-25 15:16:33
news-image

நாளை முதல் ஓடிடியில் வெளியாகிறது "முஃபாசா:...

2025-03-25 12:47:10
news-image

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல கராத்தே...

2025-03-25 11:17:30
news-image

'ரொக்கிங் ஸ்டார்' யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்'...

2025-03-24 18:06:30
news-image

அதர்வா வெளியிட்ட 'யோலோ' படத்தின் முதல்...

2025-03-24 17:52:11
news-image

'நரி வேட்டை' படத்தில் நடிக்கும் சேரனின்...

2025-03-24 17:46:39
news-image

சூர்யா நடிக்கும் 'ரெட்ரோ' படத்தின் இரண்டாவது...

2025-03-22 17:06:22
news-image

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ' தி...

2025-03-22 17:01:19
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட '...

2025-03-22 17:01:08
news-image

பேய் கொட்டு - திரைப்பட விமர்சனம்

2025-03-22 16:56:06