கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் தற்போது 800 அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கே அன்டிஜன் பரிசோதனை கருவிகள் இருப்பதாகவும் இதனால் கடுமையான நோய் அறிகுறிகளுடன் வருகின்றவர்களை தவிர சாதாரண நோய் அறிகுறிகளுடன் வருகின்றவர்களை பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, இதனால் பரிசோதனை எண்ணிக்கையினை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி 800 பிரசோதனை கருவிகள் ஒரு சில நாட்களில் முடிவடைந்து விடும் என்றும் அதற்கு பின்னர் கொழும்பிலிருந்து பரிசோதனை கருவிகள் கிடைக்கப்பெறுகின்ற போதே தொடர்ந்தும் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM