சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாடு வொஷிங்டனில் இன்று ஆரம்பமானது. இம்மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் பங்குபற்றியுள்ளார். அத்தோடு நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர். எச். எஸ். சமரதுங்க, இலங்கை மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி உள்ளிட்டோரும் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். இம்மாநாட்டில் 189 நாடுகளைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் உட்பட நிதித்துறை உயரதிகாரிகளும் பங்குபற்றியுள்ளனர்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டுக்கு இணையான பொது நலவாய அமைப்பின் நிதியமைச்சர்கள் சந்திப்பு நேற்று ஐக்கிய அமெரிக்காவின் வொஷிங்டனில் நடைபெற்றது. உலக பொருளாதார நெருக்கடி, ஐரோப்பிய சங்கத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியமை, காலநிலை மாற்றத்திற்கு முகம் கொடுப்பதற்குத் தேவையான நிதியைத் தயார்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்த  நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க  இக்கலந்துரையாடலின் போது இலங்கைக்கு அதிக பாராட்டுக்கள் கிடைக்கப் பெற்றதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.