(ஜெ.அனோஜன்)
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி:20 தொடர் ஆரம்பிக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், குசல் மெண்டிஸுக்கு கொவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
சிம்பாப்வே அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தின் போது விக்கெட் காப்பில் ஈடுபட்ட வலது கை தொடக்க ஆட்டக்காரரின் சேவையை இழந்தது இலங்கை அணிக்கு பெரும் இழப்பாகும்.
எனினும் நடப்பு உலக டி:20 சம்பியனான அவுஸ்திரேலியாவுக்கு எதிரான எதிர்வரும் போட்டிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை அணித் தலைவர் தசூன் சானக்க,
உலக சாம்பியனான பெருமை அவுஸ்திரேலியாவுக்கு உண்டு, ஆனால் திறமையின் உச்சக்கட்டத்தை எட்டிய வீரர்கள் எமது அணியில் ஏராளமானவர்கள் உள்ளதானால், அவுஸ்திரேலியாவை வீழ்த்தும் திறன் எமக்கு உள்ளது
சர்வதேச கிரிக்கெட்டில் பல வெற்றிகரமான சாதனைகளுடன் பந்துவீச்சு ஆலோசகராக லசித் மலிங்க இருப்பது அணிக்கு பெரும் பலம்.
கொவிட்-19 காரணமாக குசல் மெண்டீஸ் முதல் போட்டியில் விளையாடுவார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. அவரைத் தவிர எங்களிடம் தற்சமயம் மூன்று விக்கெட் காப்பாளர்கள் உள்ளனர், அம் மூவரில் தினேஷ் சண்டிமால் விக்கெட் காப்பில் அதிகம் ஈடுபடுவார் என்று நம்புகின்றேன்.
கொவிட்-19 தொற்றில் இருந்து மீண்டு வரும் சாமிக்க கருணாரத்ன மற்றும் நுவான் துஷார ஆகியோர் ஏற்கனவே குழுவில் உள்ளனர் மற்றும் மூன்று நாள் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்தவுடன் அவர்களின் பயிற்சியை மீண்டும் தொடங்குவார்கள்.
இதற்கிடையில், அவுஸ்திரேலியாவில் டி:20 உலகக் கிண்ணம் எதிர்வரு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளதால், இங்குள்ள ஆடுகளங்களைப் புரிந்து கொள்வதில் போட்டி முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற தொழில்நுட்ப ஆதரவு ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இலங்கை அணித் தலைவர் இதனைக் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM