2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு வசதியாக விசேட பொலிஸ் பாதுகாப்புத் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சையின் போது தேவையான பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு கல்வி வலயத்திற்கும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை நியமிக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பரீட்சை நிலையங்கள், ஒருங்கிணைப்பு நிலையங்கள், சேகரிப்பு நிலையங்கள் மற்றும் வினாத்தாள் மதிப்பீட்டு நிலையங்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படும்.
வினாத்தாள்களை எடுத்துச் செல்லும் போது ஒரு பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பில் இருப்பர்.
மேலும் நடமாடும் ரோந்து குழுக்கள், பகல் மற்றும் இரவு நேரங்களில் பாதுகாப்புக்காக அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் குறிப்பிட்ட வலயங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் பாதுகாப்பு குழுக்களை மேற்பார்வையிடுவார்கள்.
ஏதேனும் கூடுதல் கோரிக்கைகள் இருந்தால் கூட ஏற்றுக்கொள்ளப்படும். சுற்றறிக்கையின் அடிப்படையில் அனைத்து பிராந்திய மற்றும் பிரதேச பொலிஸ் பிரிவுகளும் 2021 உயர்தரப் பரீட்சையை சுமூகமாக நடத்துவதற்கு பாதுகாப்பை வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM