(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
சமையல் எரிவாயு சிலிண்டர்களின் அண்மித்த வெடிப்பு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதமாக நஷ்டஈடு வழங்க லிட்ரோ பணிப்பாளர் சபை முடிவு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) சபை ஒத்திவைப்பு வேளை கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
சமையல் எரிவாயு சிலிண்டர்களை அண்மித்த வெடிப்பு சம்பவங்களில் பாரிய பிரச்சினை ஏற்பட்டது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது.
தற்போது சமையல் எரிவாயு சந்தைக்கு தட்டுப்பாடின்றி வருகிறது. அதேபோன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களை அண்மித்த வெடிப்பு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க லிட்ரோ பணிப்பாளர் சபை முடிவு செய்துள்ளது.இறந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக உச்ச பட்ச இழப்பீடு வழங்கப்படும். இதனை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அத்துடன் களஞ்சியப்படுத்த போதுமான வசதி இன்மையால் பாவனையாளர்களுக்கு மேலதிகமாக 150 ரூபாவை ஏற்க நேரிட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்திடம் 800 மெற்றிக் தொன் லீட்டர் சமையல் எரிவாயு களஞ்சியப்படுத்தும் வசதியே இருக்கிறது. ஆனால் மாதாந்தம் 45 ஆயிரம் மெற்றிக் தொன் சந்தைக்கு விநியோகிக்கப்படுகிறது.
பாரிய கப்பலில் எடுத்து வரும் சமையல் எரிவாயு மாலைதீவில் இருந்து சிறு கப்பல்களில் நாட்டுக்கு எடுத்து வரப்படுகிறது. 50 000 மெற்றிக் தொன் எடுத்து வந்தால் செலவு குறையும். இதற்கு அதிகளவு முதலீடு செய்ய வேண்டும்.
லாப் மற்றும் லிட்ரோ கம்பனிகளுக்கு தேவையான சமையல் எரிவாயுவை ஒரே தடவையில் எடுத்து வந்து விநியோகிக்க நிறுவனமொன்றைஅமைக்க திட்டமிடப்பட்டது. என்றாலும் அது தற்பொழுது பிற்போடப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM