கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு

08 Feb, 2022 | 10:03 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றம் ஜனாதிபதியினால் ஒத்துவைக்கப்பட்டதனால் செயற்குழுக்கள் செயலிழந்தன. அவற்றை மீண்டும் நியமித்து அதற்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள அதன் பிரகாரம் கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியலை பிரதி சபாநாயகர் செவ்வாய்க்கிழமை 8 ஆம் திகதி  சபையில் அறிவித்தார்.

அதன் பிரகாரம் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119 இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஜனவரி 21 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டபிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) நியமிக்கப்பட்டுள்ளது. 

இக்குழுவில் பணியாற்றுவதற்காக பின்வரும் உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளனர்.  

அமைச்சர்  உதய கம்மன்பில, இராஜாங்க அமைச்சர்களான  துமிந்த திசாநாயக்க,  தயாசிறி ஜயசேகர,  லசந்த அலகியவன்ன, டாக்டர்  சுதர்ஷினிபெர்னாண்டோ புள்ளே,  செஹான் சேமசிங்க,  பிரசன்ன ரணவீர,  எம்.பி.க்களான திஸ்ஸ அத்தநாயக்க  பேராசிரியர்  திஸ்ஸ விதாரண,   ஹரின்  பெர்னாண்டோ,  நிரோஷன் பெரேரா,  அஸோக அபேசிங்ஹ,  புத்திக பத்திரண  கே. காதர் மஸ்தான்,  மொஹமட் முஸம்மில், சிவஞானம் சிறீதரன்,  ஹேஷா விதானகே, டாக்டர்  உபுல் கலப்பத்தி, பீ.வை.ஜீ. ரத்னசேகர,  வீரசுமன வீரசிங்ஹ, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, கலாநிதி திருமதி  ஹரினி அமரசூரிய ஆகியோராவர்.

அதேபோன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120 இன் ஏற்பாடுகள் மற்றும் 2022  ஜனவரி 21 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய (கோப்)குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

இக்குழுவில் பணியாற்றுவதற்காக பின்வரும் உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளனர்.  

அமைச்சர்களான  மஹிந்த அமரவீர,  மஹிந்தானந்த அளுத்கமகே ரோஹித அபேகுணவர்தன, கலாநிதி  சரத் வீரசேகர,இராஜாங்க அமைச்சர்களான  ஜயந்த சமரவீர,  டி.வீ. சானக,  இந்திக அனுருத்த ஹேரத், கலாநிதி  நாலக கொடஹேவா,  எம்.பி.க்களான ரவூப் ஹக்கீம்,கலாநிதி  சுசில் பிரேமஜயந்த,  அநுர திசாநாயக்க, பாட்டளி சம்பிக ரணவக்க,  ஜகத் புஷ்பகுமார, கலாநிதி  ஹர்ஷ த சில்வா,  இரான் விக்கிரமரத்ன,  நளின் பண்டார ஜயமஹ, எஸ்.எம். மரிக்கார்,  பிரேம்நாத் சி. தொலவத்த, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,  மதுர விதானகே, சாகர காரியவசம், பேராசிரியர் சரித்த ஹேரத் ஆகியோராவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிங்கள குடியேற்றத்துக்காக தமிழர் தாயகம் இராணுவத்தினரால்...

2023-03-21 19:48:06
news-image

நவம்பர் 18 இன் பின்னர் தேர்தல்...

2023-03-21 17:21:57
news-image

காணாமலாக்கப்படுதலுக்கு இலங்கைக்கு முதல் பரிசை வழங்க...

2023-03-21 17:33:38
news-image

சுதந்திர ஊடக செயற்பாட்டை சவாலுக்குட்படுத்த வேண்டாம்...

2023-03-21 19:50:58
news-image

அரசாங்கம் மக்கள் மீதான அடக்குமுறைகளை முன்னெடுக்க...

2023-03-21 19:54:32
news-image

இலங்கையில் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்களவு மனித...

2023-03-21 19:52:01
news-image

கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றத்தைக்...

2023-03-21 16:51:25
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் என்ன...

2023-03-21 17:05:42
news-image

கடன்களின் ஸ்திரத்தன்மை வெகுவிரைவில் உறுதிப்படுத்தப்படும் -...

2023-03-21 17:31:42
news-image

செய்தியில் பொய்யை மாத்திரம் சமூகமயப்படுத்தும் ஊடகங்களுக்கு...

2023-03-21 17:13:08
news-image

இலங்கை குறித்த சர்வதேச நாணய நிதியத்தின்...

2023-03-21 17:25:01
news-image

ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் நேர்மையாக முன்னெடுக்கப்படும்...

2023-03-21 19:55:55