பதியதலாவ - வெஹரகொட வாவியில் நீராடச் சென்ற  இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

நான்கு இளைஞர்கள் நீராடச் சென்ற நிலையில் அதில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நீரில் மூழ்கிய இருவரையும் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞர்கள் பதியதலாவ, தலாப்பிட்டிஓய பிரதேசத்தைச் சேர்ந்த 19 மற்றும் 25 வயதுடையதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலங்கள் பதியதலாவ வைத்தியசாலையில்வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மரண விசாரணைகள் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.