பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம், மனித உரிமைகள் விவகாரங்களில் சிவில் சமூக அமைப்புக்களின் பங்களிப்பு வரவேற்கப்பட வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம்

Published By: Vishnu

08 Feb, 2022 | 02:22 PM
image

(நா.தனுஜா)

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டமையை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பயங்கரவாத தடை சட்ட மறுசீரமைப்பு, மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் காண்பிக்கும் வலுவான பங்களிப்பை வரவேற்க வேண்டுமே தவிர, அதுகுறித்து எதிர்ப்பை வெளிக்காட்ட கூடாது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

 உரியவாறு வரைவிலக்கணப்படுத்தப்படாத குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரில் நபர்களைக் கைதுசெய்வதற்கும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தாமல் 18 மாதங்கள் வரை தன்னிச்சையாகத் தடுத்துவைப்பதற்குமான வாய்ப்பை வழங்கக்கூடிய பயங்கரவாத தடை சட்டம் சித்திரவதைகளும் மனித உரிமை மீறல்களும் இடம்பெறுவதற்கு வழிவகுக்குகின்றது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளடங்கலாகப் பல்வேறு சர்வதேச கட்டமைப்புக்களும் உள்நாட்டு மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டிவருகின்றனர். 

அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்கவேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக அதில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெற்றுக்கொள்வதற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாகக் கடந்த அரசாங்கம் வாக்குறுதி வழங்கியிருந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தாமல் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றது. 

அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த கவிஞரான அஹ்னாப் ஜஸீம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று  உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருணாகலில் ரயிலில் மோதி வயோதிபர் உயிரிழப்பு!

2025-01-17 10:17:09
news-image

கையடக்கத் தொலைபேசிகளுக்கு பகிரப்படும் போலி குறுஞ்செய்திகள்,...

2025-01-17 10:38:20
news-image

இரத்மலானையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-01-17 10:05:38
news-image

ஜனவரி 21 முதல் 24 வரை...

2025-01-17 10:23:11
news-image

ஹிக்கடுவை கடலில் நீராடிய கனேடிய பிரஜை...

2025-01-17 09:30:41
news-image

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து...

2025-01-17 09:32:58
news-image

சிவில் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கி, தோட்டாக்களுடன்...

2025-01-17 09:09:49
news-image

இன்றைய வானிலை

2025-01-17 06:20:17
news-image

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம்...

2025-01-17 05:22:45
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு: ...

2025-01-17 05:07:35
news-image

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24ஆம்...

2025-01-17 05:01:39
news-image

இலங்கை இந்திய மீனவர் விவகாரம் :...

2025-01-17 04:53:30