(கார்வண்ணன்)

“சிங்களத் தலைவர்களைத் தேடித் தேடிச் சந்தித்து, சிங்கள பௌத்த பிக்குகளுடன் கூடிக் கூடிப் பேசும் ஜனாதிபதி, இரண்டு ஆண்டுகளில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை யாரிடமாவது கேட்டிருக்கிறாரா?”

“சுதந்திர தினத்தன்று முள்ளிவாய்க்காலில், ஒன்று கூடியது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படாததால் தான்.  குருந்தூர்மலையில் நிலமீட்புக்கான போராட்டம் தமிழரின் வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டதால் தான்”

நாடு மிகமோசமான பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியிருக்கும் போது, தற்போதைய அரசாங்கம் அறிமுகப்படுத்திய கொள்கைகள் அனைத்தும், எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போது, அதிலிருந்து வெளியே வருவதற்கான வழி என்ன? 

தாம் முன்வைக்கும் தீர்வுகள் என்ன என்பதை நாட்டு மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்கு ஜனாதிபதிக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன.

  • முதலாவது வாய்ப்பு - கடந்தமாதம் பாராளுமன்றக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்த போது நிகழ்த்திய உரை. அதில் எதிர்பார்க்கப்பட்ட எந்த விடயங்களும் இருக்கவில்லை. அதனால் தான், அதனை வெறும் குப்பை பேச்சு என்று இரா.சம்பந்தன் சினத்துடன் கூறியிருந்தார்.
  • இரண்டாவது வாய்ப்பு - சுதந்திர தின உரையின் போது ஜனாதிபதிக்கு கிடைத்தது.

அதிலாவது அவர், தெளிவான நிலையை வெளியிட்டிருக்க முடியும். அக்கிராசன உரையைப் போலவே அதுவும் வெறும் அலங்கார வார்த்தைகளால் நிரம்பியதாகவே இருந்தது.

பொறுப்புகள், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது, அதற்கான தீர்வுகளையும், திட்டங்களையும் முன்வைக்க வேண்டியது ஜனாதிபதியின் கடப்பாடு.

ஆனால், அவர் அவற்றை முன்வைக்காமல், எதிர்ப்படுபவர்களையெல்லாம் குற்றம்சாட்டி விமர்சித்து, தன்னையும் அரசாங்கத்தையும், காப்பாற்றிக் கொள்ளவே முயன்றிருக்கிறார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-02-06#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/