ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு பிணை வழங்கும் தீர்மானத்திற்கு சர்வதேச மன்னிப்புச்சபை வரவேற்பு

Published By: Vishnu

08 Feb, 2022 | 12:59 PM
image

(நா.தனுஜா)

பிரபல சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்குப் பிணை வழங்குவதற்கு நீதிமன்றம் மேற்கொண்ட தீர்மானத்தை வரவேற்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

11 rights organisations urge Sri Lanka to release Hejaaz Hizbullah  'immediately and unconditionally' | Tamil Guardian

அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்தைத் திருத்தியமைப்பதற்குத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எவையும் எதிர்பார்க்கப்பட்டவாறான பெறுபேற்றைத் தராத நிலையில், அதனை முழுமையாக இல்லாதொழிப்பதுடன் அதுவரையில் அச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

 உயிர்த்த ஞாயிறுதினப்பயங்கரவாதத்தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளுக்காகக் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டு, சதிசெய்தமை மற்றும் சமூகங்களுக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்டிய குற்றச்சாட்டுக்களின்கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டது.

இந் நிலையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை 'மனசாட்சியின் கைதியாக' அடையாளப்படுத்தியதுடன் எவ்வித நிபந்தனைகளுமின்றி அவரை முழுமையாக விடுதலைசெய்யவேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்திவந்த சர்வதேச மன்னிப்புச்சபை, நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49
news-image

தமிழ் மக்கள் என்றும் தமிழ்க் கட்சிக்கே...

2025-03-23 15:16:09
news-image

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற...

2025-03-23 14:33:57
news-image

35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்களுடன்...

2025-03-23 15:14:11
news-image

யாழில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு

2025-03-23 13:53:20
news-image

விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-03-23 15:10:49
news-image

மன்னார் பள்ளமடு - பெரியமடு பிரதான...

2025-03-23 13:39:10
news-image

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு...

2025-03-23 13:41:35
news-image

யாழில் மின்கலங்களை திருடிய குற்றச்சாட்டில் கடற்படை...

2025-03-23 12:50:49
news-image

இனவாதத்திற்கு மதவாதத்திற்கு இடமளிக்கமாட்டேன் என தெரிவித்துக்கொண்டு...

2025-03-23 12:38:36
news-image

வெடிமருந்து, உள்நாட்டு துப்பாக்கியுடன் இருவர் கைது...

2025-03-23 12:44:52
news-image

வட கொழும்பு தொகுதி கொட்டாஞ்சேனை மேற்கில்...

2025-03-23 12:38:35