திருகோணமலை - கிண்ணியா, இடிமன் பகுதியில்  தனது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தையை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த தந்தையை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளனர்.

15 வயது சிறமியொருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதமளவில் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு, குழந்தை பிரசவித்து இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த பொலஸார்  குறித்த தந்தையை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட தந்தையை இன்று திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறுமி குழந்தையுடன் உறவினர் வீடொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.