(ஆர்.ராம்)

விமானப்படைக்கு சொந்தமான ஹெலிஹொப்டர்களை பயன்படுத்திய அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரின் பெயர் பட்டியல் உட்பட அது தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியை நேரடியாக அழைத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கம் கோரவுள்ளதாக தெரியவருகின்றது. 

முன்னதாக ஒன்றிணைந்த எதிர்க் கட்சியைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எம்.பி.யான உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்திருந்த பாதுகாப்ப இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர்களில் பயணித்த அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் வாதிகள் தொடர்பான பெயர்விபரங்களை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து அமைச்சர்களான  சாகல ரட்நாயக்க,ராஜிதசேனரட்டன, ஜோன் அமரதுங்க,  பைசர் முஸ்தபா, கயந்த கருணாதிலக்க, ஹரின் பெர்ணான்டோ விஜேதாச  ராஜபக் ஷ கட்டணம் செலுத்தாது பயணங்களில் ஈடுபட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை தவறானது என சுட்டிக்காட்டி அதற்கு கடுமையான கட்டணத்தையும் பாராளுமன்றத்தில் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.