(என்.வீ.ஏ.)
பதுளை வின்சென்ட் டயஸ் விளையாட்டரங்கில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திர கிண்ண நான்காம் கட்ட கால்பந்தாட்டத்தில் சப்ரகமுவ மாகாண அணியும் தென் மாகாண அணியும் வெற்றியீட்டின.
திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்ற முதலாவது போட்டியில் பலம்வாய்ந்த மேல் மாகாணத்தை 2 - 1 என்ற கோல்கள் கணக்கில் சப்ரகமுவ மாகாணம் வெற்றிகொண்டது.
போட்டியின் 33ஆவது நிமிடத்தில் கோல் காப்பாளர் நுவன் கிம்ஹான உயர்த்தி உதைத்த பந்தைப் பெற்றுக்கொண்ட அணித் தலைவர் மொஹமத் ஷிபான் இடதுபுறமாக எதிரணி வீரர்கள் இருவரைக் கடந்து சென்று கோல் வாயிலை நோக்கி பரிமாறினார்.
அந்த சந்தரப்பத்தில் மேல் மாகாண பின்கள வீரர் சலன ப்ரேமன்த பந்தை வெளியில் உதைக்க முயற்சித்தபோது மொஹமத் முஷ்பிக் கோலாக்கி சப்ரகமுவ மாகாணத்தை முன்னிலையில் இட்டார்.
இதனைத் தொடர்ந்து இடைவேளையின்போது சப்ரகமுவ மாகாணம் 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளையின் பின்னர் 68ஆவது நிமிடத்தில் எஸ். சில்வா பரிமாறிய பந்தை முஷ்பிக் கோலாக்கி சப்ரகமுவ மாகாணத்தை 2 - 0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இட்டார்.
இதனைத் தொடர்ந்து மேல் மாகாண வீரர்கள் கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தனர். இறுதியில் உபாதையீடு நேரத்தில் நவீன் ஜூட் ஆறுதல் கோல் ஒன்றை மேல் மாகாணத்துக்கு போட்டுக்கொடுத்தார்.
இப் போட்டியைத் தொடர்ந்து மின்னொளியில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் ரஜரட்ட அணியை தென் மாகாண அணி 2 - 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டது.
ஆரம்பம் முதல் திறமையாக விளையாடிய தென் மாகாணம் சார்பாக 5ஆவது நிமிடத்தில் சுப்புன் தனஞ்சய பந்தை தலையால் முட்டி முதலாவது கோலைப் போட்டார்.
போட்டியின் 49ஆவது நிமிடத்தில் அவிஷ்க கவிந்து தனது கோல் எல்லையிலிருந்து உதைத்த நீள்தூர பந்தை நோக்கித் தாவிய சுப்புன் தனஞ்சய தனது இரண்டாவது கோலையும் தலையால் முட்டி போட்டார்.
போட்டி முடிவடைய 4 நிமிடங்கள் இருந்தபோது தனது அணிக்கு கிடைத்த பெனல்டியை ரஜரட்ட அணித் தலைவர் சரித்த ரத்நாயக்க கோலாக்கினார்.
அதன் பின்னர் கோல் நிலையை சமப்படுத்த ரஜரட்ட எடுத்த முயற்சிகள் கைகூடாமல் போக தென் மாகாண அணி 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.
அணிகள் நிலை
திங்கட்கிழமை 7ஆம் திகதிவரை நடைபெற்று முடிந்துள்ள 16 போட்டிகளின் அடிப்படையில் வட மாகாணம் 4 போட்டிகளில் 3 வெற்றிகள், ஒரு வெற்றிதோல்வியற்ற முடிவுடன் 10 வெற்றி புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தில் இருக்கின்றது.
சப்ரகமுவ மாகாணம் 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் கிழக்கு மாகாணம் 6 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும் இருக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM