பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்வரை சுகாதார துறையின் போராட்டம் தொடரும் - சமன் ரத்னப்பிரிய

Published By: Digital Desk 3

08 Feb, 2022 | 10:12 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

சுகாதார துறையின் தாதியர், உதவி வைத்தியர்கள் உட்பட ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு முரண்பாடுகளை நீக்குதல் உட்பட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும்வரை தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம் என சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணை அமைப்பாளர் சமன் ரத்னப்பிரய தெரிவித்தார்.

தாதியர், உதவி வைத்திய சேவையாளர்கள் உட்பட 18 தொழிற்சங்கங்கள் நேற்று முன்னெடுத்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும்வரை சுகாதார துறையின் 18 தொழிற்சங்கங்கள் இணைந்து ஆரம்பித்திருக்கும் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவே தீர்மானித்திருக்கின்றோம். அதன் பிரகாரம் இன்றைய தினம் மதியம் சுகாதார அமைச்சுக்கு முன்னால் பாரியதொரு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க இருக்கின்றோம்.

அத்துடன் சிறுவர் வைத்தியசாலை, மகப்பேற்று வைத்தியசாலை, சிறு நீரகம் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை உட்பட மத்திய இரத்த வங்கிகளில் தற்போதைக்கு பணி பகிஷ்கரிப்பு போராட்டம் இடம்பெறுவதில்லை. என்றாலும் எமது கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு கிடைக்காவிட்டால் இந்த இடங்களிலும் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவேண்டி ஏற்படும்.

சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகள் எமது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்காமல் இருப்பதாலே பணிபகிஷ்கரிப்பு வரை செல்வதற்கு காரணமாகி இருக்கின்றது. 

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் சுகாதார அமைச்சின் செயலாளர் பணிப்பாளர் நாயகம் உட்பட அதிகாரிகளுடன் ஆராேக்கியமானதொரு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. என்றாலும் அதன் மூலம் தீர்வு கிடைக்கவில்லை.

அதனால் எமது கோரிக்கைகளுக்கு தீர்வி கிடைக்கும்வரை பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதை தவிர எமக்கு வேறு மாற்றுவழி இல்லை. எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சரோ சுகாதார அமைச்சோ தயாராக இல்லை. ஆனால் இவர்கள் வேறு பிரச்சினைகள் உருவாக்கி, தொழிற்சங்க போராட்டங்களுக்கு தடைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

அத்துடன் சுகாதார ஊழியர்களினட 7 கோரிக்கைகளில் 4 கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றி இருப்பதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துவரும் கருத்தில் எந்த உண்மையும் இல்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47