தமிழ் நாட்டில் மதவாத அரசியல்?

08 Feb, 2022 | 09:57 AM
image

(குடந்தையான்)

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பெப்ரவரி 19 ஆம் திகதியன்று நடைபெறுகிறது. 

இதற்கான கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ஜ.க. இந்த முறை தனித்து போட்டியிடுகிறது. 

இந்த முடிவு அந்தக் கட்சி தமிழகத்தில் வளர்ச்சி அடைந்திருக்கிறதா? இல்லை இன்னும் நோட்டாவுடன் போட்டியிடுவது தொடர்கிறதா? என்பது தேர்தல் முடிவுக்குப் பின்னர் உறுதியாக தெரியவரும்.

ஆனால் இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நூறுசதவீத வெற்றியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. இருக்கிறது. 

அதேதருணத்தில் அ.தி.மு.க.வின் சுமையாக கருதப்பட்ட பா.ஜ.க. இந்தமுறை தனித்துப் போட்டியிடுவதால் அ.தி.மு.க.விற்கு கிடைக்க வேண்டிய சிறுபான்மையின வாக்குகள் முழுமையாக கிடைக்கும் என்றும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு இடம்பெயர்ந்த சிறுபான்மையின வாக்குகள் மீண்டும் அ.தி.மு.க.விற்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதால் அக்கட்சி அதிக இடங்களை கைப்பற்ற கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

ஆனால் தேர்தல் விடயங்களில் மக்களின் உளவியல் போக்கில் தற்போது புதிதாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

நடைபெறுவது உள்ளாட்சி தேர்தல் என்பதால் மக்கள் தங்களுக்கு சேவை செய்துவரும் சமூக செயற்பாட்டாளர்களை வெற்றி பெற செய்வர் என்றும் புதிதாக தமிழக அரசியல் களத்தில் அறிமுகமாகியிருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு விஜய் இரசிகர்களாக இருக்கும் வாக்காளர்களும் தமிழக மக்களும் தங்களது ஆதரவை வழங்கக்கூடும். இதன் காரணமாக இந்த முறை அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகளின் வெற்றியைக்கூட இவர்களால் மாற்றியமைக்க முடியும் என்றும் கணிக்கப்படுகின்றது.

அதேதருணத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பினை ஏற்று இருக்கும் தி.மு.க. மீது மக்களுக்கு பாரிய அளவில் அதிருப்தி இல்லாதிருப்பதாலும் ஆளும் கட்சி என்பதாலும் அரசு இயந்திரத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி கிடைத்திருப்பதால் தி.மு.க.வினர் உற்சாகமாக களத்தில் பணியாற்றி வருகிறார்கள். 

இவர்களிடத்தில் ஆள் பலம், பணபலம் அதிகார பலம் என்று அரசியல் வலிமைக்கு தேவையான அனைத்தும் இருப்பதால் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. நூறு சதவீத வெற்றியைப் பெறுவது உறுதி என்று அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-02-06#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுங்க வரி இன்றி UK சந்தை:...

2026-01-25 16:21:25
news-image

பொது அர­சியல் ஆவணம் அவ­சி­யமும் அவ­ச­ரமும்

2026-01-25 16:20:43
news-image

விதைக்காமல் எவ்வாறு அறுவடை செய்வது?

2026-01-25 16:20:26
news-image

புலிகளின் புரியாணியும் முஸ்லிம்களின் கண்ணீரும்

2026-01-25 16:20:10
news-image

உகண்டாவில் ஏழாவது தடவையாக ஜனாதிபதியாகும் முசேவெனி

2026-01-25 15:44:58
news-image

ஈரானில் ஆட்சியை கவிழ்க்க சதி செய்த...

2026-01-25 15:38:16
news-image

மூலோபாய உதவியின் நோக்கம் என்ன?

2026-01-25 15:17:08
news-image

'பிரஜாசக்தி' : அரசாங்க அதிகாரத்தை அரசியல்...

2026-01-25 14:13:45
news-image

வடக்கில் பெருந்தொகையானோரின் வாழ்வாதாரம் மிகமோசமாகப் பாதிப்பு...

2026-01-25 14:00:29
news-image

தொடர் போராட்­டத்­துக்குத் தயாரா?

2026-01-25 12:51:37
news-image

மாவிலாறு போல மாறிய தையிட்டி விவகாரம்

2026-01-25 12:33:10
news-image

தமிழ்த் தேசிய போராட்டத்தின் ஆரம்பகர்த்தா முத்துக்குமாரசுவாமி

2026-01-25 12:15:33