(ஜெ.அனோஜன்)
பல்வேறு காரணங்களுக்காக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளை உரிய ஒழுக்காற்று விசாரணை அல்லது சட்ட நடவடிக்கைகள் முடியும் வரை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளாது இருக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இவ்வாறான அதிகாரிகளை மேலும் பாதுகாப்பது திணைக்களத்தின் நல்வாழ்வுக்கு பாதகமாக அமையும் என்பதனால் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என தெரிவித்த சிறைச்சாலைகள் திணைக்களம், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களின் சேவையை நிறுத்த அல்லது கடுமையான தண்டனைகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊழல் நடவடிக்கைகள் மற்றும் சித்திரவதை அல்லது கைதிகளை தாக்கியதாக கூறப்படும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அனைத்து அத்தியட்சகர்களுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளார்.
இதேவேளை, சிறைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிறைச்சாலை அதிகாரிகளின் சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பில் அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0112678600 என்ற இலக்கத்தின் ஊடாக வழங்கப்படும் தகவல்கள் தொடர்பில் பெயர் வெளியிடாமல் இருப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM