இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினை - இலங்கையின் துணை உயர் ஸ்தானிகருடன் நாளை பேச்சுவார்த்தை

Published By: Digital Desk 4

07 Feb, 2022 | 10:33 PM
image

(ஆர்.யசி)

இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் விதமாகவும், இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் தமிழக மீனவர் அமைப்புகள் நாளை சென்னையில் உள்ள தென்னிந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் டி.வெங்கடேஸ்வரன் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

World Fishermen Day: உலக மீனவர் தினம்... எப்போது தொடங்கியது? ஏன்? - world  fishermen day celebrated today | Samayam Tamil

இலங்கையின் வட கடல் எல்லையை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் இதனால் வடக்கு மாகாண மீனவர்களுக்கு பாரிய பாதிப்பும் அநீதியும் ஏற்படுவதாக தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் குற்றம் சுமத்தி வருகின்ற நிலையில் தற்போது இந்த விவகாரம் இலங்கையில் பாரிய எதிர்ப்பலையை உருவாக்கியுள்ளது.

கடந்த வாரம் வடக்கில் முன்னெடுக்கப்பட்ட மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தை அடுத்து இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி செயற்பாடுகளை முழுமையாக தடுத்து நிறுத்துவதாக இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கியிருந்ததுடன், அதனையும் தாண்டி இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்தால் இலங்கை மீனவர்களே அவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் மீனவர்கள் ஆவேசப்பட்டு கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.  

இந்நிலையில், எல்லை தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்களின் படகுகளை தடுத்து வைத்துள்ள இலங்கை கடற்படையினர், மீன்பிடித்துறை அமைச்சின் ஊடாக அந்த படகுகளை இலங்கை மீனவர்களிடத்தில் ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை நேற்றைய தினம் முன்னெடுத்திருந்தது.

இந்தபின்னணியில் இலங்கை- இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் விதமாகவும், இலங்கை கடற்படையினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும் இந்திய தமிழக மீனவர் அமைப்புகள் இன்றைய தினம் சென்னையில் உள்ள தென்னிந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் டி.வெங்கடேஸ்வரன் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளனர். இராமேஸ்வரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஏனைய சில பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மீனவர் அமைப்புகள் இவ்வாறு தென்னிந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் டி.வெங்கடேஸ்வரன் அவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இது குறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா கேசரிக்கு தெரிவிக்கையில், இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்ட காலமாக தீர்வின்றி காலம் கடத்தப்பட்டுக்கொண்டுள்ளது. இரு நாட்டு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமாகும். நாம் இரு தரப்பும் தமிழர்கள், தொப்புள்கொடி உறவுகள் என்ற உறவில் இத்தனை காலமாக வாழ்ந்து வருகின்றோம். இப்போது மீனவர்கள் பிரச்சினைகளை பூதாகரமாக்கி அதனால் இரண்டு தரப்பினரும் பிளவுபட வேண்டிய அவசியம் இல்லை. எந்தவொரு பிரச்சினையையும் பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்க்க முடியும், ஆகவே இரண்டு நாட்டு மீனவர்களின் பிரச்சினையில் இரண்டு தரப்பும் ஒன்றாக அமர்ந்து இறுதித் தீர்மானம் எடுப்பதே ஆரோக்கியமானது.

அதுமட்டுமல்ல, இதுவரை காலமாக கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின்  படகுகளை தற்போது இலங்கை மீனவர்களிடத்தில் ஏலத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல. எனவே எமது மீனவர்களின் படகுகளை விடுவிக்கவும், இந்தியாவில் இலங்கை மீனவர்களின் படகுகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளது என்றால் அதனை விடுவித்து அவர்களிடம் கையளிக்குமாறு வலியுறுத்தியும் தென்னிந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் டி.வெங்கடேஸ்வரன் அவர்களுடன் நாளைய தினம் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளோம். தூதுவர் மூலமாகவேனும் இவ்வாறான ஒரு பேச்சுவார்த்தையை நடத்தி இரண்டு தரப்பு மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகளை எட்ட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10