15 நாட்களாக தேடப்பட்டு வந்த நபர் வயல் வெளியிலிருந்து சடலமாக மீட்பு 

Published By: Digital Desk 4

07 Feb, 2022 | 06:21 PM
image

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை வயல் பகுதியில் இன்று திங்கட்கிழமை (07) சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

வயல் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி வாழைச்சேனை பொலிஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர். 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் - மயிலங்கரைச்சை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய சீனித்தம்பி யோகராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், 15 நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு சென்றதாகவும், அவரை தேடி வந்ததாகவும் அவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் குடும்பத்தினர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர். 

இதையடுத்து வயலில் இருந்து  மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைத்து...

2024-11-08 16:47:02
news-image

பள்ளிக் கல்வி நடவடிக்கைகளில் தகவல் தொடர்பாக...

2024-11-08 17:56:26
news-image

அர்ஜுன் அலோசியஸ் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது குற்றப்புலனாய்வு...

2024-11-08 16:55:36
news-image

06 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை...

2024-11-08 17:48:32
news-image

ஊவா மாகாணத்திலுள்ள இந்திய வீடமைப்புத் திட்டங்களைப்...

2024-11-08 17:39:04
news-image

பாடசாலைகளில் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவது தொடர்பாக...

2024-11-08 17:48:15
news-image

ஜா - எலயில் ஆயுர்வேத மசாஜ்...

2024-11-08 17:17:34
news-image

தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக...

2024-11-08 17:03:38
news-image

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை இரண்டாயிரத்துக்கும்...

2024-11-08 16:51:59
news-image

நீர்கொழும்பில் சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் கைது

2024-11-08 16:42:19
news-image

கடும் இடி, மின்னல் தாக்கம் குறித்து...

2024-11-08 16:38:09
news-image

ஹொரணை - கொழும்பு வீதியில் விபத்து...

2024-11-08 16:20:05