ஸ்ரீ அரவிந்தரின் யோக காவியம் – 06

07 Feb, 2022 | 05:02 PM
image

ஸாவித்ரி காவியத் தொடக்கம்

இந்தப் பகுதிக்கு ஸ்ரீ அரவிந்தர் தந்திருக்கும் பெயர் Symbol of dawn; வைகறையின் குறியீடு என்பதாகும்.

வைகறை என்பது யோக சாதனையில் ஈடுபடும் ஒருவனுக்கு தான் யோகத்தில் ஒளியை அடையும் முன்னர் அவனுக்கு ஏற்படக்கூடிய அனுபவங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த அத்தியாயத்தில் குறியீட்டு மொழியால் விளக்குகிறார். 

காவியத்தில் அன்றைய நாள் சத்தியவான் இறக்கப்போகும் நாள்; அதேவேளை அந்த இறப்பை ஸாவித்ரி தனது ஆற்றலால் வெல்லவும் போகிறாள். இவற்றின் மறைபொருள் விளக்கம் என்ன என்பதைப் பற்றியதே இந்த அத்தியாயம்.

இந்தக் காவியத்தை இலக்கியம் படிப்பது போன்று படிக்க க் கூடாது என்று ஸ்ரீ அன்னையும், அவரது சீடருமான எம். பி. பண்டிட் அவர்கள் கூறியுள்ளார்கள். இந்தக்காவியத்தில் ஒருவன் ஆன்மா அடையும் உயர்வு நிலைகளைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. இவற்றை தகுந்த ஏற்பு நிலையை ஏற்படுத்திக்கொண்டு படிக்கும் போன்று சாதகன் ஆன்ம உயர்வு பெறுவான் என்பது இதன் சிறப்புகளில் ஒன்றாகும்.

வைகறை என்பது வெறுமனே அன்றைய பொழுது விடியப்போகிறது என்பதற்கான குறியீடு அல்ல. அன்றைய தினம் மிகவும் சவாலான சத்தியவான் இறக்கப் போகும் நேரம். காவியத்தைப் படிப்பவர்கள் இது ஏதோ வைகறை பற்றிய வர்ணனை என்று எண்ணிவிடக்கூடாது என்பதற்காக ஸ்ரீ அரவிந்தர் இது ஒரு மறைபொருள் குறியீடு என்று இந்த அத்தியாயத்திற்கு Symbol of dawn.

வைகறை என்பது இங்கு சத்தியவான் ஸாவித்ரியின் ஆற்றலால் பெறப்போகும் புதிய படைப்பிற்குமான குறியீடாகும். ஒரு நாள் என்பது வட்டமான சுழற்சிகளை உடைய ஒன்றாகும். காலையில் சூரியன் உதித்து, பின்று உச்சிக்குச் சென்று பின்னர் மறைந்து இருளாகி, தேய்ந்து வளரும் சந்திர ஒளியினைப் பெற்றுக்கொண்டு மீண்டும் வைகறைப் பொழுதில் சூரிய உதயத்தை எதிர்பார்த்திருப்பது தினமும் நடைபெறும் ஒழு சுழற்சியாகும். இதைப் போன்ற ஒரு பெரிய சுழற்சி படைப்பில் நிகழ்கிறது. ஆக இந்த அத்தியாயம் வெளிப்பார்வைக்கு சத்தியவானின் மரணம் நிகழவதற்கு முன்னர் நடைபெறும் ஒரு நாளின் வைகறைப் பொழுதாகத் தெரிந்தாலும் உண்மையில் படைப்பின் சுழற்சியில் படைப்பு நிகழ்வதற்கு முன்னர் பிரபஞ்சம் எப்படி இருந்தது என்பது பற்றிய குறியீட்டு மறையியல் விளக்கமாகும்.

It was the hour before the Gods awake. 1.1 கடவுளர்கள் விழித்தெழுவதற்கு முந்தைய மணி நேரம் அது. 

இதுவே ஸாவித்ரியின் முதல் வரி. இது சொல்லவரும் செய்தி என்ன? இறைவனில் இருந்து படைப்பு ஆரம்பிக்கப் போகிறது. அந்தப் படைப்பு நிகழ்வதற்கும் முந்தைய ஒரு மணி நேரம் எப்படி இருக்கும் என்ற உண்மையைச் சொல்ல விழைகிறார். இந்தப்பிரபஞ்சத்தின் படைப்பு எப்படி நிகழ்ந்தது என்பதை எமது புராணங்கள் கூறுகிறது. இந்த வரியை ஸ்ரீ அன்னை இப்படி விளக்குகிறார்.

படைப்பு என்பது அன்னை பராசக்தியின் முதல் வெளிப்பாடு. அசல் நிலையில் பராசக்தி நான்கு விதமாக வெளிப்படுகிறார்.

1. ஒளிமயமான உணர்வு அல்லது ஆன்மா

2. ஆனந்தம்

3. சத்தியம்

4. அமரத்துவம்

இந்த நான்கு அம்சங்களும் ஒரு ஆன்மாவிற்கு இருக்கும் போது அது பராசக்தியுடன் தொடர்பு பட்டிருக்கிறது. ஆனால் காலப்போக்கில் மூலசக்தியில் இருந்து ஆன்மாக்கள் தம்மை பிரித்துக்கொள்கிறது. இப்படிப் பிரித்துக்கொள்ளும் போது இந்த நான்கு அசல் நிலையும் இருள் நிறைந்த தாழ் நிலை அடைகிறது.

1. ஒளிமையமான உணர்வு ஒளியை இழந்து இருளான மயக்கம் நிறைந்த நிலையை அடைகிறது.

2. ஆனந்த மயமான உணர்வு துன்பத்தை அனுபவிக்கத் தொடங்குகிறது.

3. சத்தியத்தன்மை பொய்மையாக மாறுகிறது.

4. அமரத்துவம் மரணமாக மாறுகிறது.

தொடரும் (.........)

- ஸ்ரீ ஸக்தி சுமனன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right