சுகாதார தொழிற்சங்க வேலைநிறுத்தம் ; வைத்தியசாலைகள் ஸ்தம்பிதம், நோயாளிகள் பாதிப்பு

By Vishnu

07 Feb, 2022 | 02:05 PM
image

(எம்.மனோசித்ரா)

சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு உள்ளிட்ட 7 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற்சங்கள் இன்று முன்னெடுத்த போராட்டத்தின் காரணமாக பல வைத்தியசாலை செயற்பாடுகள் முடங்கியமையால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

தாதியர் சேவை, முழு நேர மற்றும் இடைக்கால சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் இணைந்து 18 தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. 

இதன் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைகளுக்கு  சென்ற நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

எவ்வாறிருப்பினும் நாரஹேன்பிட்டி மத்திய குருதி சேமிப்பு வங்கி மற்றும் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை, பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை - பேராதனை , மஹரகம போதனா வைத்தியசாலை, காசல் வீதி மகளிர் வைத்தியசாலை, டி சொய்சா வைத்தியசாலை, கேதுமதி மகளிர் வைத்தியசாலை , மஹமோதர பெண்கள் வைத்தியசாலை, மாளிகாவத்தை மற்றும் பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலைகள் என்பவை தொழிற்சங்க நடவடிக்கைகளில் உள்வாங்கப்படவில்லை.

மேலும் ஐ.டி.எச். உள்ளிட்ட தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளை முதற்கட்ட போராட்டத்தில் உள்வாங்கப்படவில்லை. 

அத்தோடு வேலை நிறுத்த காலப்பகுதியில் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.  கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளிலும் சேவை முடங்காது என்று தெரிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

2022-10-07 10:52:21
news-image

நாவலப்பிட்டியில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது

2022-10-07 10:49:00
news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப...

2022-10-07 10:45:59
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:44:53
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-10-07 08:38:12
news-image

உலக நாடுகள் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள்; சர்வதேச...

2022-10-07 08:10:22
news-image

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடின் நாடு பாரிய நெருக்கடிக்குள்...

2022-10-06 18:47:07
news-image

ஊழல் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க நாட்டு மக்கள்...

2022-10-06 18:37:34
news-image

ஜனாதிபதி ரணிலை பணயக்கைதியாக வைத்திருக்கவில்லை -...

2022-10-06 22:00:05