(நேர்காணல்:- ஆர்.ராம்)
“இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் தீர்க்க முடியாமைக்கு பண முதலைகள் சிலரின் நலன்களே காரணம்”
“நடைபெற்று வருகின்ற போராட்டங்களினுள் சுயநல அரசியல்வாதிகள் உள்நுழைந்து, தமது சுயலாப அரசியலுக்கு பயன்பபடுத்துகின்றனர்”
“போராடும் கடற்றொழிலாளர்களின் உணர்வுகளை மதிப்பதோடு எதிர்காலத்தில் உயிரிழப்புகள் நடைபெறக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு”
“எழுத்துமூலமான உத்தரவாதத்தினை வழங்குவதற்கு தயங்கவில்லை. அதனை வைத்து என்ன செய்யப்போகின்றார்கள்?”
இலங்கை, இந்திய கடற்றொழிலாளர் விடயத்தினை தீர்ப்பதற்காக இராஜதந்திர ரீதியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவே உள்ளோம்.
ஆனால் இந்தியாவிடமிருந்து அதற்குச் சாதகமான சமிக்ஞை கிடைக்கவில்லை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்தார்.
அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,
கேள்வி:- வடமராட்சியில் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கும் கடற்றொழிலாளர்களுக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?
பதில்:- கடற்றொழிலாளர்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விவகாரம் தனியே டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட விவகாரம் அல்ல.
ஒன்றையொன்று அனுசரித்துப் போகவேண்டிய இரண்டு நாடுகள் சம்மந்தப்பட்ட விவகாரம். ஆகவே விடயங்களை நிதானமாகத்தான் கையாள வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில், எமது கடல் வளத்திற்கும் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதத் தொழில் முறைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
இதனை நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறேன்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2022-02-06#page-6
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM