இனந்தெரியாத நபர்கள் தன்னை கடத்தி தாக்குதல் நடத்தியதாக வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மேற்கொண்டிருந்த முறைப்பாடானது பொய் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 9 ஆம் குறித்த பொலிஸ் அதிகாரி தாக்கப்பட்ட நிலையில் புஞ்சி பொரளை பகுதியில் மீட்கப்பட்டிருந்தார். 

தன்னை இந்தெரியாத நபர்கள் கடத்தி தாக்குதல் நடத்தியிருந்ததாக குறித்த அதிகாரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் குறித்த சம்பவம் பொய்யான என உறுதி செய்துள்ளனர்.