பெற்றோர்கள் பல­மான குடும்­ப­மொன்றைக் கட்­டி­யெ­ழுப்ப விரும்­பினால், தின­சரி உணவு நேரங்­களில் கைய­டக்கத் தொலை­பே­சிகள், கணி­னிகள், மற்றும் தொலைக்­காட்­சி­களை நிறுத்­தி­விட்டு தமது பிள்­ளை­க­ளுடன் இணைந்து உணவு அருந்த வேண்டும் என பாப்­ப­ரசர் பிரான்சிஸ் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.


வத்­திக்­கா­னி­லுள்ள சென்.­பீற்றர்ஸ் சதுக்­கத்தில் ஆற்­றிய வாராந்த உரையின் போதே அவர் இவ்­வாறு வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
மேற்­படி இலத்­தி­ர­னியல் உப­க­ர­ணங்­க­ளுக்கு அடி­மைப்­பட்டு பிள்ளைகளை அலட்­சியம் செய்­வது, அந்தப் பிள்ளைகள் ஓய்­வுபெற்ற வயோ திபர்கள் போன்று தனி­மைப்­ப­டுத்­தப்­பட வழி­வகை செய்­வ­தாக உள்­ளது என அவர் கூறினார்.


குடும்­பத்­தினர் சிறு­வர்­க­ளுடன் இணைந்து உண­வ­ருந்­து­வது புதிய தலை­மு­றை­யி­னரை ஊக்­கு­வித்து அவர்­க­ளு­ட­னான உறவை வலுப்­ப­டுத்தும் என அவர் தெரி­வித்தார்.
இலத்­தி­ர­னியல் உபக­ர­ணங்­க­ளுக்கு அடி­மைப்­பட்டு ஒன்றாக உணவருந் துவதை தவிர்ப்பது, குடும்ப உறுப்பி னர்களுக்கிடையிலான நெருக்கத்தை இல்லாமல் செய்யும் என அவர் வலியுறுத்தினார்.