கூகுள் குரோம் லோகோவில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றம்

Published By: Digital Desk 3

07 Feb, 2022 | 10:33 AM
image

உலகின் முன்னணி இணைய உலாவியான கூகுள் குரோம் (Google Chrome) 8 ஆண்டுகளுக்குப் பிறகு லோகோவை மாற்றியுள்ளது. 

இதனை கூகுள் குரோம் லோகோ  வடிவமைப்பாளரான எல்வின் ஹு (Elvin Hu) டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

தன்னுடைய பதிவில் கூகுள் குரோமின் புதிய வடிவமைப்பையும் அவர் பதிவிட்டுள்ளார். 

புதிய லோகோ மாற்றம் குறித்து அவர் எழுதியுள்ள பதிவில், "உங்களில் சிலர் இன்று குரோமின் ஒரு புதிய ஐகானைக் கவனித்திருக்கலாம். ஆம்! 8 ஆண்டுகளில் முதல் முறையாக குரோமின் பிராண்ட் ஐகான்களைப் புதுப்பிக்கிறோம். புதிய ஐகான்கள் உங்கள் சாதனங்களில் விரைவில் தோன்ற தொடங்கும்." என தெரிவித்துள்ளார். 

வர்ண விகித்தாச்சாரங்கள் வேறுபடுத்தப்பட்டு, முன்பிருந்ததைவிட பிரகாசமாக இருக்கும் வகையில் லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது. நடுவில் நீலநிறப்பந்து கொடுக்கப்பட்டுள்ளது. 

விண்டோஸ்,மேக் ஓ.எஸ். மற்றும் ஐ.ஓ.எஸ் ஆகியவற்றில் இந்த புதிய லோகோ விரைவில் தோன்றவுள்ளது. 

"ஓ.எஸ்.சார்ந்த தனிப்பயனாக்கங்களை நாங்கள் உருவாக்கினோம். குரோம் ஐகான் எளிதில் அடையாளம் காணப்பட வேண்டும். விண்டோஸ் 10 மற்றும் 11 ஹோம் பேஜ்ஜில் கூகுள் குரோம் ஐகான் தோற்றம் இனி வித்தியாசமாகவும், தனியாகவும் தெரியும்" என ஹூ கூறினார். 

குரோம் கேனரி பயன்படுத்துபவர்களுக்கு இந்த புதிய லோகோ உடனடியாக தெரிய தொடங்கும் என கூறியுள்ள ஹூ, கூகுள் குரோமின் புதிய ஐகான் நிச்சயம் அனைவரையும் கவரும் எனக் கூறியுள்ளார்.  கூகுள் குரோம் கேனரி 100வது வெர்சனை பெற இருப்பதை கொண்டாடும் வகையில் குரோம் ஐகான் மாற்றப்பட்டுள்ளது. 

லோகோவைப் பொறுத்தவரை சிவப்பு, நீலம் மற்றும் பச்சை ஆகிய நிறங்கள் மாற்றப்படவில்லை. அவற்றின் சேட்யூரேஷன் மற்றும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜப்பானில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலகின் முதல் முப்பரிமாண...

2025-04-15 09:32:38
news-image

ஜிப்லியால் சட் ஜிபிடியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை...

2025-04-02 17:09:37
news-image

இந்தியாவில் 2 ஆயிரம் கிலோ மீற்றர்...

2025-03-31 12:39:07
news-image

எக்ஸ் தளத்தை விற்பனை செய்தார் எலான்...

2025-03-30 09:46:36
news-image

செயற்கை நுண்ணறிவால் பதற்றத்தை உணர முடியுமா...

2025-03-29 14:44:37
news-image

மறைந்துவிட்டதா சனியின் வளையங்கள்!?

2025-03-26 13:35:10
news-image

உரையாடல்களை நேரடியாக மொழிபெயர்க்கக்கூடிய ஏர்போட்கள் ;...

2025-03-19 12:17:11
news-image

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் 20...

2025-03-15 19:00:33
news-image

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் சிறப்பம்சங்கள்

2024-09-10 15:40:23
news-image

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

2024-08-29 19:56:50
news-image

இந்தியாவின் நடமாடும் மருத்துவமனைகள் ; ஆக்ராவில்...

2024-05-22 20:10:13
news-image

“பிக்சல் ப்ளூம்” கொழும்பு தாமரை கோபுரத்தில்...

2024-05-11 09:37:56