2021 க்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.
பெப்ரவரி 07 இன்று ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இம்முறை 3 இலட்சத்து 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்துள்ளார்.
பரீட்சார்த்திகள்
இம் முறை பாடசாலை ஊடாக 2 இலட்சத்து 79 ஆயிரத்து 142 பரீட்சாதிகளும் , 66,101 தனியார் பரீட்சாத்திகளும், ஒட்டுமொத்தமாக 3 இலட்சத்து 45 ஆயிரத்து 242 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
பரீட்சை நிலையங்கள்
நாடளாவிய ரீதியில் 2,438 பரீட்சை மத்திய நிலையங்களும் , 316 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் சுகாதார அமைச்சுடன் இணைந்து கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்ட பரீட்சாத்திகளுக்கென விசேட பரீட்சை மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி மாவட்ட அடிப்படையில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் 29 விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொவிட் தொற்றுக்கு உள்ளான பரீட்சாத்திகள் தமது சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அறிவித்து , இந்த விசேட பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை எழுத முடியும்.
அது மாத்திரமின்றி தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியமையால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் , அறிகுறிகளுடையோருக்கு பிரதான பரீட்சை மண்டபங்களில் பிரத்தியேக அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
சுகாதார மருத்துவ அதிகாரி ஊடாக பாடசாலை அதிபருக்கு அறிவித்து , இந்த பிரத்தியேக அறைகளில் பரீட்சைக்கு தோற்றமுடியும்.
இலத்திரனியல் உபகரணங்களுக்கு அனுமதி இல்லை
இலத்திரனியல் கைக்கடிகாரம், கையடக்க தொலைபேசி உள்ளிட்ட அநாவசிய பொருட்கள் எதனையும் பரீட்சாத்திகள் பரீட்சை மண்டபங்களுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
8 மணிக்கு பரீட்சை மண்டபத்திற்கு சமூகமளிக்க வேண்டும்
காலை 8.30 மணியளவில் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதால் 7.45 - 08.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திற்குள் பரீட்சை மண்டபங்களுக்குள் சமூமளிக்க வேண்டியது அவசியமாகும்.
தேசிய அடையாள அட்டை அவசியம்
அத்தோடு தேசிய அடையாள அட்டையைக் கொண்டு வருவதும் அத்தியாவசியமானதாகும். தவிர்க்க முடியாத நிலையில் தேசிய அடையாள அட்டை அற்றவர்கள் தமது புகைப்படத்துடன் பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்துடன் சமூகமளிக்க வேண்டும்.
எவ்வாறிருப்பினும் தேசிய அடையாள அட்டை அற்றவர்களின் பரீட்சை பெறுபேறுகள் உண்மை தன்மை உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் சற்று தாமதமாகவே வெளியிடப்படும்.
பரீட்சை ஆணையாளரை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்
பரீட்சைகள் தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் காணப்படுமாயின் பரீட்சை திணைக்களத்தின் 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 011-2784208 / 011-2784537 என்ற இலக்கங்களுக்கு அல்லது பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் 071-4679679 என்ற நேரடி கையடக்க தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 011-2784427 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு அழைத்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஒரே தொகுதியில் இரு பாடங்களை தெரிவு செய்துள்ளோர்
ஒரே தொகுதிக்குள் காணப்படும் இரு பாடங்களை தெரிவு செய்துள்ள பரீட்சாத்திகள் முதலாவது பரீட்சை நிறைவடைந்த பின்னர் , பரீட்சை மண்டபத்திலிருந்து வெளியேறாமல் அடுத்த பரீட்சையையும் எழுத தயாராக வேண்டும் (உதாரணமாக இந்து நாகரீகம் மற்றும் கத்தோலிக்க சமயம் ஆகிய ஒரே தொகுதிக்குள் அடங்கும் இரு பாடங்களை தெரிவு செய்துள்ள பரீட்சாத்திகள்).
பாடசாலைகளுக்கு விடுமுறை
உயர்தரப் பரீட்சையின் காரணமாக அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் எதிர்வரும் மார்ச் 07 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM