பதுளையில் சுதந்தர கிண்ண மாகாண கால்பந்தாட்டம்

06 Feb, 2022 | 05:38 PM
image

குருநாகல், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய நகரங்களைத் தொடர்ந்து பதுளை நகரில் மாகாணங்களுக்கு இடையிலான சுதந்தர கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் இன்றும் (06) நாளையும் (07) நடைபெறவுள்ளன.

மத்திய மாகாணத்தை அணிகள் நிலையில் முதலாம் இடத்தில் உள்ள வட மாகாணம் இன்று பிற்பகல் நடைபெற உள்ள முதலாவது போட்டியில் எதிர்த்தாடவுள்ளது.

இந்த சுற்றுப் போட்டியில் சப்ரகமுவ மாகாணத்துடனான போட்டியை வெற்றி தோல்வியின்றி (0-0) முடித்துக்கொண்ட வடமாகாண அணி, ஊவா மாகாணம் (2-0), தென் மாகாணம் (3-1) ஆகிய அணிகளை வெற்றிகொண்டிருந்தது.

கடைசி இரண்டு போட்டிகளில் திறமையாக விளையாடிய வட மாகாணம் இன்றைய போட்டியிலும் அதே திறமையை வெளிப்படுத்தினால் வெற்றிபெற வாய்ப்புள்ளது.

மறுபுறத்தில் கிழக்கு மாகாணத்துடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி (0-0) முடித்துக்கொண்ட மத்திய மாகாணம் மேல் மாகாணத்துடனான போட்டியில் தோல்வி (0-3) அடைந்தது. 

எனினும் 8 வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்ட ஊவா அணியை 2 - 1 என்ற கோல்கள் அடிப்படையில் தனது 3ஆவது போட்டியில் வெற்றிகொண்டிருந்தது.

இது இவ்வாறிருக்க, இன்று இரவு மின்னொளியில் நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் ஊவா மாகாணத்தை கிழக்கு மாகாணம் எதிர்த்தாடவுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற மத்திய மாகாணத்துடனான போட்டியில் சிவப்பு அட்டைக்கு இலக்கான 4 வீரர்கள் இன்றைய போட்டியில் ஊவா மாகாண அணியில் இடம்பெறமுடியாது.

பைராஸ் ஸஹீர், எம்.ஏ.எம். இர்பான், கவித ரவிஹான, நந்தன ஹேரத் ஆகிய ஊவா அணி வீரர்களுக்கே இன்றைய போட்டியில் விளையாட முடியாது. இது அவ்வணிக்கு பெரும் தாக்கத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கவுள்ள மற்றைய வீரர்கள் தங்களது கால்பந்தாட்ட ஆற்றல்களை வெளிப்படுத்தி ஊவா அணியில் நிலையான இடத்தைப் பிடிக்க முயற்சிக்கவுள்ளனர்.

மறுபுறத்தில் மத்திய மாகாணம் (0-0), ரஜரட்ட (1-1), சப்ரகமுவ மாகாணம் (0-0) ஆகிய 3 அணிகளுடனான போட்டிகளையும் வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டுள்ள கிழக்கு மாகாணம் இன்றைய போட்டியில் முதலாவது வெற்றியை ஈட்டுவதற்கு முயற்சிக்க உள்ளது. - 

(என்.வீ.ஏ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2023-12-01 16:52:21
news-image

கிரிக்கெட் அரங்கில் வரலாறு படைத்த உகாண்டா...

2023-12-01 15:30:34
news-image

மேஜர் லீக் ரக்பி தொடர் நாளை...

2023-11-30 17:43:19
news-image

'ஸ்ரீ லங்கா யூத் லீக் 2023'...

2023-11-30 13:51:56
news-image

தனுஸ்கவை மற்றுமொரு சட்டத்தின் கீழ் சிக்கவைப்பதற்குஅவுஸ்திரேலிய...

2023-11-29 14:37:50
news-image

எங்கள் தந்தை இருதயபரிசோதனை செய்திருந்தால் இன்றும்...

2023-11-28 12:23:12
news-image

வரலாற்றுச் சாதனை புரிந்த பம்பலப்பிட்டி இந்துவின்...

2023-11-28 09:58:58
news-image

அரசியல்வாதியாக அவதாரமெடுக்கின்றார் ஷாகிப் அல் ஹசன்

2023-11-27 14:38:26
news-image

இளையோர் உலக குத்துச் சண்டையில் களமிறங்கும்...

2023-11-25 14:16:41
news-image

ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தானின் சகலதுறை ஆட்டக்காரர்

2023-11-25 12:16:36
news-image

உலகக் கிண்ணத்தை வென்ற மெஸ்ஸியின் “ஜேர்சிகள்”...

2023-11-25 12:04:52
news-image

ஓட்டம் எதனையும் வழங்காமல் 8 விக்கெட்டுக்களை...

2023-11-24 17:48:33