இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் துனித் வெல்லாலகே

Published By: Vishnu

06 Feb, 2022 | 01:18 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று முடிந்த  14  ஆவது 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவராக செயற்பட்ட துனித் வெல்லாலகே  அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் என்ற சிறப்பைப் பெற்றார்.

பந்துவீச்சு மாத்திரமின்றி துடுப்பாட்டத்திலும் சிறப்பாக பிரகாசித்த துனித் வெல்லாலகே,  தான் ஒரு முழுமைப் பெற்ற சகலதுறை வீரர் என முழு உலகுக்கும் காட்டினார்.  

கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரி மாணவனான துனித் வெல்லாலகேவின் தலைமைத்துவப் பண்பும் பாராட்டத்தக்க ஓர் விடயமாக அமைந்தது. 

இவர் 6 போட்டிகளில் விளையாடி இரண்டு 5 விக்கெட்டுக்கள்  பெறுதியுடன் 17 விக்கெட்டுக்களை வீழ்த்தி, 13.58 என்ற பந்துவீச்சு சராசரியை கொண்டுள்ளார். 

ஸ்கொட்லாந்து அணிக்கெதிரான லீக் போட்டியில் 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை இவரின் சிறந்த பந்துவீச்சு பெறுதியாகும். 

பந்துவீச்சில் அசத்தியிருந்த துனித் வெல்லாலகே, துடுப்பாட்ட நுணுக்கங்களுடன் திறமையாக துடுப்பெடுத்தாடி அணியின் வெற்றிக்கு பங்காற்றியமை கவனிக்கத்தக்கது. 

6 போட்டிகளில் ஒரு சதம்  மற்றும் ஒரு அரைச் சதம் அடங்கலாக  264 ஓட்டங்களைப் பெற்று அதிக ஓட்டங்களை அடித்த வீரர்கள் வரிசையில் ஏழாவது இடத்தை பெற்றார். 

இத்தொடரில் இலங்கை சார்பாக விளாசப்பட்ட ஒரு சதம் இவரால் அடிக்கப்பட்டதாகும். வேறு எந்த இலங்கை வீரரும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.  

துனித் வெல்லாலகேவைத் தவிரவும், பந்துவீச்சில் டிரெவின் மெத்தியூ, மத்தீஷ பத்திரன, வினூஜ ரன்புல், ரவீன் டி சில்வா உள்ளிட்டோர் சிறப்பாக பந்துவீசியிருந்தனர்.  

மேலும், பகுதி நேரப் பந்துவீச்சாளர்களாக செயற்பட்ட ஷெவோன் டேனியல், சதீஷ ராஜக்ச,சஹான் விக்கிரமிங்க ஆகியோரும்  அணிக்கு சிறந்த பங்களிப்பை பந்துவீச்சில் புரிந்தனர்.

இருந்தபோதிலும் பகுதி நேரப் பந்துவீச்சாளர்களாக சிறப்பாக திறன்களை வெளிக்காட்டிய அளவுக்கு இந்த தொடர் த முழுவதும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியிருந்தமை  சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும். ஏனெனில், இப்போட்டித் தொடரில் அதிக ஓட்டங்களை எடுத்த துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில்  முதல் 50 வீரர்கள் வரிசையில் இலங்கை சார்பாக மூவர் மாத்திரமே இடம்பெற்றிருந்தனர். 

துனித் வெல்லாலகே 264 ஓட்டங்களுடன் 7 ஆவது இடத்திலும்,  129 ஓட்டங்களுடன் சதீஷ ராஜபக்ச   46 ஆவது இடத்தையும் , 126 ஓட்டங்களுடன் ரனூத  சோமரட்ண 48 ஆவது இடத்தையும் வகித்தனர். முன்வரிசை வீரர்களினால் போதியளவு ஒத்துழைப்பு துடுப்பாட்டத் துறைக்கு கிடைக்கவில்லை என்று  கூறுவது பொருத்தமாகும். 

இதேவேளை, 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணதொடருக்கு முன்தான வயதுக்குட்பட்ட போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டிருந்த முன்வரிசை துடுப்பாட்ட பவன் பத்திராஜவுக்கு லீக் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படாதமை ஏமாற்றமாகும். 

பவன் பத்திராஜவை பாகிஸ்தான் அணிக்‍கெதிரான 5 ஆம் இடத்துக்கான போட்டியில் மாத்திரமே விளையாடும் பதினொருவரில் வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.  

லீக் போட்டிகளின்போது, இவருக்கு ஆடும் பதினொருவரில் வாய்ப்பளிக்காதமை ஏன் என்பது பயிற்றுநர் குழாத்துக்கே வெளிச்சமாகும்.

எவ்வாறாயினும், துனித் வெல்லாலகே இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்காலம். இவ்வாண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல்.தொடரில் ஏலத்தில் அவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. 

எனினும், இலங்கை  தேசிய கிரிக்கெட்  அணியில் துனித் வெல்லாலகேவுக்கு வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35