அரசியல் அதிகாரிகளே சமாதானத்துக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்  - ஒலிம்பிக் குழு தலைவர் 

05 Feb, 2022 | 08:40 PM
image

(என்.வீ.ஏ.)

'உலகம் முழுவதும் உள்ள அனைத்து அரசியல் அதிகாரிகளே சமாதானத்துக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்' என பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் ஆரம்ப வைபவத்தில் பேசிய சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தோமஸ் பெச் அறைகூவல் விடுத்தார்.

பெய்ஜிங், பேர்ட்ஸ் நெஸ்ட் விளையாட்டரங்கில் ஸெங் ஜுனியிங்கினால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதுடன் 24ஆவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா உத்தியோகபூர்வமாக 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

91 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 போட்டியாளர்கள் பங்குபற்றும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா பெப்ரவரி 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

சீனாவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில் குளிர்கால ஒலிம்பிக்கை வரவேற்பு நாடாக முன்னின்று நடத்த சீனாவுக்கு அனுமதித்தமைக்கு சர்வதேச ஒலிம்பிக் குழு கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இவ்வாறான விமர்சனங்களுக்கு மத்தியில் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்ப வைபத்தில் உரையாற்றியபோதே உலக அரசியல் அதிகாரிகளே சமாதானத்துக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் என தோமஸ் பெச் அறைகூவல் விடுத்தார்.

பிரிவினை, மோதல்கள் மற்றும் அவநம்பிக்கை அதிகரித்துச் செல்லும் நமது பலவீனமான உலகில் கடுமையான எதிராளிகளாக இருப்பது இயல்பாகும். 

அதேநேரம், சமாதானத்துடனும் மரியாதையுடனும் வாழ்ந்து வருகின்றோம் என்றார் .

ஆரம்ப விழாவின்போது சீனாவில் வாழ்ந்துவரும் 56 சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் தேசிய கொடியை விளையாட்டரங்குக்கு கொண்டு சென்றனர். 

மேலும் பனிக்கட்டியிலிருந்து ஒலிம்பிக் வலயங்கள் மேலெழுந்தபோது அணிவகுத்து வந்த விளையாட்டு வீரர்கள் அதனடியில் குழமி நின்றனர்.

அனைவரும் ஒரே சட்ட விதிகளை பின்பற்றி ஒருவரை ஒருவர் மதித்து நடந்தால் உலகம் எப்படி இருக்கும் என்பதை உங்களால் எடுத்துக் காட்ட முடியும் என போட்டியாளர்களுக்கு தோமஸ் பெச் தெரிவித்தார்.

அதி உயரிய பரிசுக்காக அடுத்த இரண்டு வாரங்கள் நீங்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுவீர்கள்.  அதேநேரம், ஒலிம்பிக் கிராமத்தில் ஒரே கூரையின் கீழ் ஒற்றுமையாக இருப்பீர்கள். 

அங்கு எக்காரணத்துக்காகவும் பாகுபாடு இருக்காது' எனவும் தோமஸ் பெச் மேலும் குறிப்பிட்டார்.

2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாவை நடத்திய பெய்ஜிங் நகரம் இப்போது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாவை அரங்கேற்றுகிறது.

இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் கோடைகால மற்றும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களை நடத்தும் முதலாவது நகரம் என்ற பெருமையை பெய்ஜிங் பெறுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐபிஎல் ஏலத்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர்...

2025-12-17 01:20:12
news-image

இலங்கை மகளிர் அணியில் இரண்டு கை...

2025-12-17 01:15:02
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: மலேசியாவை...

2025-12-17 01:10:43
news-image

பிரமோத்ய விக்ரமசிங்கவின் தலைமையில் புதிய இலங்கை...

2025-12-16 19:07:35
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ண தனிநபருக்கான...

2025-12-16 17:02:39
news-image

ஷார்ஜா வொரியர்ஸை வெற்றிப் பெறச் செய்தார்...

2025-12-16 14:42:13
news-image

ஆசிய இளையோர் பரா விளையாட்டில் இலங்கையின்...

2025-12-16 14:05:45
news-image

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் டி.எஸ்....

2025-12-16 09:52:29
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: நேபாளத்தை...

2025-12-16 03:17:32
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: ஆப்கானிஸ்தானை...

2025-12-15 22:01:55
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வழங்கும் வளங்ளைப் பயன்படுத்தி...

2025-12-15 17:30:09
news-image

மலேசியாவை வெற்றி கொண்டதன் மூலம் ஐக்கிய...

2025-12-15 13:29:22