தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டாலும் நாடு முடக்கப்படாது  - விசேட வைத்தியர் விஜேசூரிய

05 Feb, 2022 | 04:36 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

 

கொவிட் தொற்றாளர்களிள் எண்ணிக்கை அண்மைக் காலமாக  பாரியளவில் அதிகரிப்பட்டு வருகிறது. 

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை  அதிகரிக்கப்பட்டாலும் நாடு முடக்கப்படாது என  சுகாதா சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதுடன், சிலர் வீடுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக பாரியளவில் அதிகரித்து வருகிறது. 

இதனால் எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகாதவர்களும் தங்களை பாதுகாத்துக்குவதற்கு தத்தமது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைளில்  ஈடுபடுவது அவசியமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

எப்பொழுதும் முகக் கவசத்தை உபயோகியுங்கள். சமூக இடைவெளியைப் பேணுங்கள். எவ்வேளைகளிலும், கைககளை சவர்க்காரமிட்டு நன்றாக கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மூன்றாவது தடுப்பூசி அல்லது பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுங்கள் என அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். 

அத்துடன், எல்லோரிடத்திலும், ஒமிக்ரோன் வைரஸ் இருக்கும் என்ற எண்ணத்தில் நடந்துகொள்ளுங்கள். ஒருவருக்கு காய்ச்சல், தடிமல், தொண்டை வலி, இருமல் இருக்குமாயின் உடனடியாக வைத்தியரொருவரின் உதவியை நாடுங்கள். 

மேலும், இசைக் கச்சேரிகள் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை...

2022-10-07 12:10:56
news-image

சர்ச்சைக்குரிய இந்திய நிறுவன மருந்துகள் இலங்கையில்...

2022-10-07 12:10:55
news-image

அவசியமான விடயங்களை இலங்கை செய்வதற்காக காத்திருக்கின்றோம்...

2022-10-07 11:55:23
news-image

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

2022-10-07 12:12:33
news-image

நாவலப்பிட்டியில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது

2022-10-07 10:49:00
news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப...

2022-10-07 10:45:59
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:44:53
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-10-07 08:38:12
news-image

உலக நாடுகள் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள்; சர்வதேச...

2022-10-07 08:10:22