முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்கள் மாத்திரம் பொது இடங்களுக்கு செல்லலாம் - வெளியானது விசேட வர்த்தமானி

05 Feb, 2022 | 02:28 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட் -19 தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் பொது இடங்களுக்கு செல்லலாம் என்ற விசேட வர்த்தமானியை சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல வெளியிட்டுள்ளார்.

அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல்,முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்கள் மாத்திரம் பொது இடங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது இடங்கள் மற்றும் முழுமையான தடுப்பூசி தொடர்பிலான வரையறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள வர்த்தமானியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

222 ஆம் அத்தியாவசியமான தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான கட்டளைச்சட்டத்தின் 2ஆம்,3ஆம் பிரிவுகளின் சுகாதார அமைச்சரினால் வகுக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

காலத்திற்குக்காலம் திருத்தப்பட்ட வகையில் 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி 7481ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட தானியங்களை களஞ்சியப்படுத்தல் தொடர்பான ஒழுங்குவிதிகளும் 'அங்கிவொஸ்டோமிசிலஸ்'தொடர்பான ஒழுங்குவிதிகளும் தற்போது திருத்தப்பட்டுள்ளன.

அவற்றின் 3ஆம் ஒழுங்குவிதியில் 'பொது இடம்' என்ற சொற்பதத்தின் வரைவிலக்கணத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக 'பொது இடம்'என்பது உரிமை என்ற வகையாகவேனும் அல்லது வேறுவகையாகவேனும்,கொடுப்பனவின் மீதேனும் அல்லது அதுவில்லாமலேனும் வரவழைப்பின் மீதேனும் அல்லத அதுவில்லாமலேனும் பொது மக்கள் நெறியாக்கத்தை கொண்டிருக்கம் ஏதேனும் இடம் அல்லது பொதுப்போக்குவரத்தில் பயன்படுத்தப்பட்ட இடப்பெயர்வு முறை என்று பொருளாக்கப்பட்டுள்ளது.

'முழுமையான தடுப்பூசியேற்றல்'என்பது ஏற்புடைய நபர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையதிகாரியினால் குறித்துரைக்கப்பட்டவாறு ஏற்புடைய தடுப்பூசியேற்றலின் தேவைப்பட்ட மருந்தளவுகளைப் பெற்றுக் கொண்டுள்ளார் என்று பொருளாகும்.

இலங்கை முழுவதும் முறையான அதிகாரியொருவர் காலத்திற்குகாலம் கொவிட்-19 வைரஸ் தொற்றுநோய் என்பது தொடர்பில் முழுமையாக தடுப்பூசிகயேற்றப்பட்டமைக்கான ஆதாரம்,ஆளொருவரைத் தடுப்பூசியேற்றலிலிருந்து விலக்களிப்பதற்கான விதிவிலக்கான சூழ்நிலைகள்,அத்துடன் தடுப்பூசியை பெறுவதற்கான வயதெல்லை ஆகியவற்றை தீர்மானிக்க வேண்டும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41