காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்து காத்திருப்பதாகவும் இதற்கான காத்திரமான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டி இருப்பதாக சர்வதேச மன்னிப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத கூட்டத்தொடரின்போது 30.1 உறுப்புரையில் குறிப்பிடப்பட்டதன்படி யுத்தத்தினால் காணாமலாக்கபட்ட சொந்தங்களுக்கு நீதி கிடைக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்பட வேண்டிய நிலைப்பாட்டை தெளிவுப்படுத்திருந்தது.

இதனடிப்படையில் 1995 ஆம் ஆண்டிலிருந்து யுத்தத்தினால் காணாமலாக்கப்பட்டவர்களினது உறவினர்களின் கருத்துக்கள் மற்றும் முறைப்பாடுகளை பதிவு செய்ய இலங்கை அரசாங்கம் முனைப்புகளை காட்டியிருந்தது. சுமார் 65000 முறைப்பாடுகள் இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளன.

ஆனாலும் காணாமலாக்கபட்ட உறவுகளின் கோரிக்கைகளுக்கு: செவிசாய்த்து நீதியானதும் பக்கச்சார்பில்லாததுமான உண்மையான விடயங்களை கண்டறியும் வகையில் விசாரனை முறைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். 

அந்த வகையில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் பாராட்டப்டக்கூடியதாக இருந்தாலும் குறித்த செயற்பாடுகள் மிகவும் மந்தகரமாக செயற்படுத்தப்படுகின்றது. இது அம்மக்களின்  பிரச்சினைகள் தொடர்ந்தும் நீடித்து செல்ல வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பான அலுவலகத்தை அமைத்ததன் மூலம் அம்மக்களின் சொந்த உறவுகளை கண்டறிந்து விடலாம் என ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையில் அவ்வாணைக்குழு பக்கச்சார்பற்று நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். 

மேலும் பயங்கரவாத் தடுப்பு சட்டம் சர்வதேச தரங்களுக்க் இணையாக காணப்படாத போதும் குறித்த சட்டத்தின் மூலமே தொடர்ந்தும் அம்மக்கள் வரையறுக்கப்படுகின்றார்கள்.

எனவே காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்து மந்தகதியில் செயற்படாமல் விரைவான மற்றும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.