நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரிப்பு - விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி

05 Feb, 2022 | 10:49 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. மரணங்கள் , வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் ஒட்சிசன் தேவையுடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை என்பவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 

70 சதவீதமானோருக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசியை வழங்கினால் கொவிட் தொற்று தீவிர நிலைமையை அடைவதிலிருந்து பாதுகாப்பு பெற முடியும் என்று கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சின் இணைப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று 4  ஆம் திகதி  வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். 

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது தொற்றாளர் எண்ணிக்கை 30 சதவீதத்தினாலும் , மரணங்களின் எண்ணிக்கை 8 - 10 சதவீதத்தினாலும் , ஒட்சிசன் தேவையுடைய தொற்றாளர் எண்ணிக்கை 4 சதவீதத்தினாலும் மற்றும் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 4 - 5 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளது.

ஒமிக்ரோன் பரவல் அதிகரிப்புடன் இவ்வாறு தொற்றாளர் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

எனினும் இவ்வாறான நிலைமையிலும் கூட 39 சதவீமானோர் மாத்திரமே பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர். எஞ்சியோரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டால் மாத்திரமே இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும்.

காரணம் தடுப்பூசி வழங்கலின் ஊடாக மாத்திரமே கடந்த காலங்களில் நூற்றுக்கும் அதிகமாகக் காணப்பட்ட மரணங்களின் எண்ணிக்கையை தற்போது 20 ஐ விட குறைக்க முடிந்துள்ளது. 

நாடளாவிய ரீதியில் பதிவாகும் கொவிட் மரணங்களில் மூன்றில் இரண்டு முழுமையான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களாகும். 

மூன்றாம் கட்ட தடுப்பூசி 70 சதவீதமானோருக்கு வழங்கப்பட்டால் , கடந்த சில மாதங்களாக காணப்பட்ட புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51