குளத்தில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

05 Feb, 2022 | 10:04 AM
image

நிக்கவெரட்டிய, கலபிட்டியகம குளத்தில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் நேற்று 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக நிக்கவெரட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் 59 வயதுடைய, கலபிட்டியகம பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குளத்திற்கு நேற்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், நீரில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதைக் கண்டு அதுபற்றி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார் , இதுதொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இவ்வாறு குளத்தில் மிதந்த நிலையில் மீட்கப்பட்ட குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக நிக்கவெரட்டிய தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நிக்கவெரட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்கலைக்கழக மாணவர்கள் பலவந்தமாக போராட்டங்களுக்கு அழைத்துச்...

2022-10-05 16:29:29
news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை...

2022-10-05 15:54:54