இராணுவ, விமானப் படை அதிகாரிகள்/வீரர்களுக்கு பதவி உயர்வு

Published By: Vishnu

04 Feb, 2022 | 11:40 AM
image

(ஜெ.அனோஜன்)

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 480 இராணுவ அதிகாரிகள் மற்றும் 8034 சிப்பாய்களுக்கான பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

தாய் நாட்டுக்காக இராணுவத்தினரால் வழங்கப்பட்டுள்ள அர்ப்பணிப்பு சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தேசத்தின் 74 ஆவது தேசிய சுதந்திர தினத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அனுமதியுடன் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, 7 சிரேஷ்ட பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் நிலைக்கும், 16 கேணல்கள் பிரிகேடியர் நிலைக்கும், 36 லெப்டினன் கேணல்கள் கேணல் நிலைக்கும், 50 மேஜர்கள் லெப்டினன் கேணல் நிலைக்கும் 207 கெப்டன்கள் மேஜர் நிலைக்கும், 94 லெப்டினன்கள் கெப்டன் நிலைக்கும், 70 இராண்டாம் லெப்டினன்கள் லெப்டினன் நிலைக்கும் நிலை உயர்த்தப்பட்டுள்ளனர். 

இந்நிலை உயர்வுகள் தேசிய சுதந்திர தினமான 4 பெப்ரவரி 2022 இன்று வழங்கப்பட்டுள்ளது.

ஜெனரல் சவேந்திர சில்வா 2019 ஓகஸ்ட் 18 ஆம் திகதி இராணுவத் தளபதியாக பதவியேற்றதன் பின்னர் அவர் பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் இலங்கை இராணுவத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு நான்கு இலக்க நிலை உயர்வுகளை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாற்றில் இடம்பிடித்துக் கொண்டார்.

73 ஆண்டுகால வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 18 ஓகஸ்ட் 2019 க்குப் பிறகு இன்று வரை 4341 அதிகாரிகள் மற்றும் 86741 சிப்பாய்களுக்கு நிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை விமானப்படையில் மொத்தம் 2,513 விமானப் படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை விமானப்படையின் 175 அதிகாரிகள் மற்றும் 2,338 இதர தரவரிசைகள் அடுத்த இடத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

திருட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள்...

2024-04-18 13:21:31