(ஜெ.அனோஜன்)
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை 197 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

நாளை கொண்டாடப்படும் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த கைதிகளுக்கு பொது மன்னிப்பை வழங்கவுள்ளார் என்று சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்படவுள்ள கைதிகளில் மஹர சிறைச்சாலையில் 20 கைதிகளும், கேகாலை சிறைச்சாலையில் 18 கைதிகளும், வெலிக்கடை சிறைச்சாலையில் 17 கைதிகளும், களுத்துறை சிறைச்சாலையில் 13 கைதிகளும், போகாம்பரை சிறைச்சாலையில் 11 கைதிகளும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் 11 கைதிகளும், வாரியபொல சிறைச்சாலையில் 10 கைதிகளும் உள்ளடங்குகின்றனர்.