உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

By Vishnu

03 Feb, 2022 | 04:26 PM
image

(ஜெ.அனோஜன்)

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை கால அட்டவணையை இடைநிறுத்துமாறு கோரி வெளிப்படைத்தன்மை முன்னணியின் செயலாளர் நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

மனுவில் கோரப்பட்டுள்ள நிவாரணத்தை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனக் கூறி நீதிபதி சோபித ராஜகருணா இந்த உத்தரவை பிறப்பித்தார்.

பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2021 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவின் பிரதிவாதிகளாக கல்வியமைச்சர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

நிலவும் கொவிட்-19 நிலைமை காரணமாக உயர்தர மாணவர்களால் கல்வி நடவடிக்கைகளை முடிக்க முடியவில்லை. எனவே பரீட்சையை குறைந்தபட்சம் 20 வாரங்களுக்கு ஒத்திவைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நாகாநந்த கொடித்துவக்கு மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33