புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க வேண்டும் - ஞானசார

Published By: Vishnu

03 Feb, 2022 | 04:12 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக ஒரே நாடு-ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வெலிகட சிறைச்சாலையில் இருந்த வேளையில் விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சிறைக்கைதிகள் என்னுடன் சுமுகமான முறையில் பழகினார்கள். அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த துயரங்களை பரிமாற்றிக் கொண்டார்கள்.

யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் யுத்த சூழலை தொடர்ந்து மீட்டுவது நடைமுறைக்கு பொருத்தமற்றதாக அமையாது. ஆகவே சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது சிறையில் உள்ளவர்களின் உறவினர்கள் அவர்களை விடுவிக்குமாறு தாழ்மையுடன் வலியுறுத்தினார்கள்.

விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தியபோது அவர் 'அதனை செய்ய வேண்டும்' என குறிப்பிட்டார்.

74 ஆவது தேசிய சுதந்திர தினத்தின்போது விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவராம் படுகொலை – லலித் குகன்...

2024-10-12 21:25:11
news-image

தற்போதைய களச் சூழலில் தமிழ் அரசுக்...

2024-10-12 18:21:05
news-image

வீதியில் விழுந்து கிடந்த நபர் கார்...

2024-10-12 20:48:06
news-image

கிரியுல்ல - மீரிகம வீதியில் விபத்து;...

2024-10-12 18:20:35
news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம்...

2024-10-12 18:33:39
news-image

ஈ.பி.டி.பியின் தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவாகவே...

2024-10-12 18:07:05
news-image

அத்தனகலு ஓயா, உறுவல் ஓயாவைச் சூழவுள்ள...

2024-10-12 17:20:26
news-image

மன்னார் குருவில்வான் கிராமத்தில் வறிய குடும்பம்...

2024-10-12 16:56:16
news-image

யாழில் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் நகை,...

2024-10-12 16:52:49
news-image

மட்டு. போதனா வைத்தியசாலையில் சிசிரிவி கமராவை...

2024-10-12 17:09:25
news-image

யாழ். சுழிபுரத்தில் கசிப்புடன் ஒருவர் கைது!

2024-10-12 16:41:57
news-image

நாட்டில் நாளாந்தம் 08 உயிர் மாய்ப்பு...

2024-10-12 16:41:28