ஒரு இலட்ச அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

03 Feb, 2022 | 07:46 PM
image

(இராஜதுரை ஹஷான்)

2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் யோசனைகமைய 85 பில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 14 ஆயிரத்து 21 கிராமசேவகர் பிரிவுகள் ஊடாகவும்,4ஆயிரத்து 914 உள்ளுராட்சி மன்ற தொகுதிகள் ஊடாக ஒரு இலட்ச அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாடுதழுவிய ரீதியில் ஆரம்பமானது.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பமானது.இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்கள்,அரச அதிகாரிகள் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

ஒரு இலட்சம் அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ 'கிராமத்துடனான உரையாடல்'செயற்திட்டத்தின் ஊடாக மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு பெற்றுக் கொடுக்க தீர்மானித்தார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக கிராமத்துடனான உரையாடல் செயற்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.

2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் யோசனைக்கமைய நாடுதழுவிய ரீதியில் உள்ள கிராமசேவகர் பிரிவு,உள்ளுராட்சிமன்ற பிரிவு ஆகியவற்றின் ஊடாக மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க 1இலட்சம் அபிவிருத்தி செயற்திட்ட பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு இலட்சம் அபிவிருத்தி செயற்திட்டத்திற்காக 85 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இச்செயற்திட்டத்தை 11மாத காலத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பிரதான இலக்காக காணப்படுகிறது.

இவ்வருட இறுதிக்குள் பாரிய அபிவிருத்தி பணிகள் பூரணப்படுத்தப்படும் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-07-15 06:35:23
news-image

வியாபாரியை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பது பிறிதொரு...

2024-07-14 21:25:06
news-image

மட்டக்களப்பில் முச்சக்கர வண்டியை மோதிவிட்டு தப்பிச்...

2024-07-14 21:19:43
news-image

திருகோணமலையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்...

2024-07-14 21:24:24
news-image

கிளிநொச்சியில் ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் !

2024-07-14 21:25:27
news-image

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல்...

2024-07-14 21:27:47
news-image

வட்டுக்கோட்டையில் பத்து போத்தல் கசிப்புடன் பெண்...

2024-07-14 17:46:06
news-image

முச்சக்கரவண்டிக்கு எரிபொருள் நிரப்பச் சென்ற முதியவர்...

2024-07-14 17:17:42
news-image

மக்கள் பெருமையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழலை...

2024-07-14 17:24:08
news-image

தீகவாபி தூபியில் நினைவுச் சின்னங்கள், பொக்கிஷங்கள்...

2024-07-14 17:28:57
news-image

எதிர்க்கட்சி தலைவருக்கான பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்...

2024-07-14 17:53:32
news-image

1700 ரூபாய் சம்பளம் வழங்குமாறு கோரி...

2024-07-14 16:29:28