(எம்.மனோசித்ரா)
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் வாகனத்தின் மீது முட்டை தாக்குதலை மேற்கொண்டமை யாருடைய தேவைக்காக என்பதை துரிதமாக வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார வலியுறுத்தியுள்ளார்.
இந்த தாக்குதலை நடத்திய நபர்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பிலும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவைப் போன்று முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதியின் உறவினரான கொழும்பு நகரசபையின் உறுப்பினர் பிரதீப் ஜயவர்தனவின் மீது முட்டை தாக்குதலை மேற்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் அக்கட்சி என்ன நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது என்பதையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அநுரகுமார திஸாநாயக்கவின் வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட முட்டை தாக்குதலில் தனியார் பாதுகாப்பு பிரிவினர் தொடர்புபட்டுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளமை தொடர்பில் துரிதமாக ஆராயந்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
பிற்போக்கான அரசியல் சிந்தனையின் காரணமாகவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரும் , பொதுஜன பெரமுனவினரும் இந்த தாக்குதல்கள் தொடர்பில் மௌனமாக உள்ளனர். ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றமையை உலக நாடுகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM