பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் 3டி அவதார் உருவங்கள் அனுப்பும் வசதி அறிமுகம்

By T. Saranya

03 Feb, 2022 | 02:00 PM
image

பேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் செயலிகளில் 3டி உருவங்களை உருவாக்கி மற்றவர்களுக்கு அனுப்பும் மேம்படுத்தப்பட்ட வசதியை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகப்படுத்தி உள்ளது.

பயனர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரிஸ் போடுவது மற்றும் மற்றவர்களுக்கு அனுப்பும் குறுஞ்செய்திகளில் 3டி உருவங்களை கொண்டு அனுப்பும் வசதி புதிதாக சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வசதி விரைவில் மற்ற நாடுகளில் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right