சட்ட விரோதமாக இத்தாலி செல்ல முற்பட்ட இளைஞர் கைது

03 Feb, 2022 | 12:44 PM
image

(எம்.மனோசித்ரா)போலி ஆவணங்களைத் தயாரித்து சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முற்பட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலிக்கான போலி வதிவிட வீசாவைப் பயன்படுத்தி கட்டாரின் டோஹா நகர் ஊடாக இத்தாலி செல்ல முற்பட்ட போதே குறித்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு - குடியகழ்வு திணைக்களத்தின் எல்லை கண்காணிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் 22 வயதுடைய , சிலாபம் - மாரவில பகுதியைச் சேர்ந்தவராவார். குறித்த இளைஞன் நேற்று முன்தினம் புதன்கிழமை கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கியூ.ஆர்.655 என்ற விமானத்தில் பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு பிரிவிற்கு சென்று, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த              குடிவரவு - குடியகழ்வு  அதிகாரியிடம் அதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

இதன் போது இத்தாலிக்கான வதிவிட வீசா சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்டமையால் குறித்த அதிகாரி அதனை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு - குடியகழ்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் தீ விபத்து

2022-12-08 13:48:01
news-image

நாமலுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் ஒத்திவைப்பு

2022-12-08 13:37:40
news-image

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்ய...

2022-12-08 13:34:43
news-image

பசறையில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

2022-12-08 13:18:14
news-image

தனது தங்க நகையை கொள்ளையிட்டவர்களுடன் சூட்சுமமாக...

2022-12-08 13:06:52
news-image

கசினோ சட்டமூலத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி

2022-12-08 12:47:02
news-image

தென்கிழக்காசியாவின் 8 நாடுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்...

2022-12-08 12:15:02
news-image

சாய்ந்தமருது பிரதேசத்திற்கான எல்லை நிர்ணய அறிக்கை...

2022-12-08 12:08:58
news-image

வெல்லாவெளியில் யானை தாக்கியதில் பெண் உயிரிழப்பு

2022-12-08 13:31:04
news-image

74 வயதான மனைவியை மண்வெட்டியால் தாக்கிக்...

2022-12-08 11:49:47
news-image

ஆபத்தான நோய்களினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் உயிரிழப்பது...

2022-12-08 11:45:27
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு இவ்வருடம்...

2022-12-08 11:59:18