சர்வதேச கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட மற்றொரு போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு

Published By: Vishnu

03 Feb, 2022 | 12:00 PM
image

(ஜெ.அனோஜன்)

இலங்கை கடற்படை மற்றும் புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், 2022 ஜனவரி 26 ஆம் திகதி இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்திய மற்றுமொரு வெளிநாட்டுக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது. 

கடற்படை, இலங்கை காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் ஒருங்கிணைந்த புலனாய்வு நடவடிக்கையின் அடிப்படையில், இந்த சிறப்பு நடவடிக்கை கடல் ரோந்து கப்பலான SLNS Sayurala மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, SLN கப்பல், சர்வதேச கடற்பரப்பில் சுமார் 02 வார கால கண்காணிப்புக்குப் பிறகு, இலங்கைக்கு தெற்கே சுமார் 1081 கடல் மைல் (சுமார் 2002 கி.மீ) தொலைவில் உள்ள பெருங்கடலில் சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டுக் கப்பல் ஒன்று தங்கியிருப்பதை கண்டறிந்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டுக் கப்பலைத் விசாரணை செய்வதற்காக கடற்படையின் விசேட குழுவொன்று அனுப்பப்பட்டபோது, கடற்படையின் வருகையை அவதானித்த கப்பலில் இருந்த நபர்கள் பல சாக்கு மூட்டைகளை கடலுக்குள் தூக்கி வீசியுள்ளனர்.

அதன் பின்னர் சந்தேகத்திற்கிடமான கப்பலை அடைந்த கடற்படையினர், எஞ்சியிருந்த சுமார் 250 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.

அது மாத்திரமின்றி செயற்கைக்கோள் தொலைபேசியொன்றும் இதன்போது மீட்கப்பட்டதுடன்,கப்பலில் இருந்த 09 வெளிநாட்டு பிரஜைகளை கடற்படையினர் கைதுசெய்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 08 சாக்கு மூட்டைகளில் சுமார் 200 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்தல்காரர்கள் கடலிலுக்குள் வீசப்பட்டமை கண்டறியப்பட்டது.

குறித்த கடற்பகுதியில் போதைப்பொருள் மூட்டைகள் இருந்ததா என கடற்படையினர் குழுவினர் சோதனையிட்ட போதிலும் சுமார் 3,800 மீற்றர் ஆழம் கொண்ட கடற்பரப்பில் இருந்து எவ்வித தடயமும் கிடைக்கவில்லை.

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுக்கும் கொவிட்-19 நெறிமுறைகளைப் பின்பற்றி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெளிநாட்டுக் கப்பலுடன் மேலதிக விசாரணைகளுக்காக இன்று (பிப்ரவரி 03) கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். 

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையானது நாட்டிற்கு மற்றொரு பெரிய அளவிலான சட்டவிரோத போதைப்பொருட்களின் இறக்குமதியினை தடுக்க வழிவகுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17