தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாவிட்டால் தமிழ் பேசும் மக்களை புறக்கணிப்பதாகவே அமையும் - சி.துரைநாயகம்

Published By: Digital Desk 3

03 Feb, 2022 | 12:02 PM
image

சுதந்திர தினத்தில்கூட தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாவிட்டால் அது ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களையும் அரசு புறக்கணிப்பதாகவே அமையும் என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்துள்ளார்.

இலங்கைவாழ் அனைத்து இன மக்களினதும் பங்களிப்பினால் ஆங்கிலேயரின் 133 வருடகால ஆட்சிக்குப் பின்னர் 1948ம் ஆண்டு இன்றைய தினத்தில் இலங்கைத் தீவுக்கான சுதந்திரம்  கிடைத்தது.

எனினும் அந்த சுதந்திரக் காற்றை தமிழ் பேசும் மக்களும் சுவாசிப்பதற்கு அரசு இடமளிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக தமிழ் பேசும் மக்களும் தங்களுடைய பங்களிப்பை இன்றுவரை வழங்கி வருகின்றார்கள் என்பதை அரசு மறந்துவிடக்கூடாது. 

அத்துடன் பாகுபாடு காண்பிப்பதை விடுத்து அனைத்து இனங்களையும் அரவணைத்துச் செல்ல அரசு முயற்சிக்க வேண்டும். இதுவே நாட்டை சுபீட்சத்துக்கு இட்டுச் செல்லும்.

இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் 26வது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை பிரஜைகளின் அடிப்படை உரிமையாக மொழி உரிமை காணப்படுகின்றது. 

ஒருவரின் ஐந்து விரல்களை போலவே, இலங்கையர்களின் தாய் மொழியாக தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் காணப்படுகின்றன.

 எனவே அரசு இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுடைய உணர்வுகளையும், உரிமைகளையும் மதித்து சுதந்திரதினத்தில் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17