ஆபத்தை ஏற்படுத்தும் டெலிவொர்க்கிங் முறை

By T. Saranya

03 Feb, 2022 | 10:42 AM
image

நவீன தொழில்நுட்ப வசதிகள் துணையுடன் வேலை செய்வது ஆபத்து என்று உலக சுகாதார ஸ்தாபனம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகமெங்கும் பணிச்சூழலையே மாற்றி விட்டது. வீட்டில் இருந்து கொண்டு இணையதளம், இ-மெயில், தொலைபேசி போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி வேலை செய்வது ‘டெலிவொர்க்கிங்’ என அழைக்கப்படுகிறது.

டெலிவொர்க்கிங் பல நிறுவனங்களுக்கு அதிக உற்பத்தித்திறன் மற்றும் குறைந்த செயல்பாட்டு செலவுகளுக்கு வழிவகுக்கிறது.  எவ்வாறாயினும், சரியான திட்டமிடல் அமைப்பு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு இல்லாமையால் தொழிலாளர்களின் உடல் , மன ஆரோக்கியம் மற்றும் சமூக நல்வாழ்வில் டெலிவேர்க்கிங் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

டெலிவொர்க்கிங் முறையில் பணி செய்வதால் முதுகுவலி, மனநல பாதிப்பு, சமூக தனிமை, நிலையான மன உளைச்சல், தனிமை , புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் அதிகரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று  உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

தொலைதூரத்தில் இருந்து கணினியில் நீண்ட நேரம் வேலை செய்வது தசையில் காயங்கள், கண் அழுத்தம் ஏற்படும் என்றும் எச்சரித்து இருக்கிறது. 

தனிநபர்களின் பணி விருப்பங்களை பொறுத்து மனநிலை பாதிப்பு அபாயங்களும் ஏற்பட வாய்ப்பு உண்டாம்.

வீட்டில் இருந்து வேலை செய்வதால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு இடையே அதிக எண்ணிக்கையிலான மோதல்கள் ஏற்படுவதாகவும்  உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வு காட்டுகிறது.

நன்றி ; தினத்தந்தி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right